அடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்?

By Siva

Recommended Video

ஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி- வீடியோ

சென்னை: ஸ்ரீரெட்டியிடம் ஆதாரங்கள் இருந்தால் இந்நேரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கலாமே என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னை வந்துள்ள ஸ்ரீ ரெட்டி படுக்கைக்கு அழைத்த தமிழ் பிரபலங்கள் பற்றி தொடர் பேட்டிகள் கொடுத்துள்ளார்.

கார்த்தி

கார்த்தி

ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும். அவரின் புகார்கள் ஆதாரம் அற்றவை. அவர் கூறிய புகார்களுக்கு இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லாததால் இது குறித்து நான் பேச முடியாது என்று நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

ஆதாரம்

ஸ்ரீ ரெட்டி விவகாரத்தை ஊதி பெரிதாக்குவதா, வேண்டாமா என்பதை மீடியாக்கள் முடிவு செய்யட்டும். தான் கூறும் புகார்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் ஸ்ரீ ரெட்டி இந்நேரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சும்மா அனைவர் மீதும் புகார் கூறி வருகிறார். அதனால் இந்த விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் கார்த்தி.

புகார்

புகார்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி. ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டியின் புகாரை அனைவருமே மறுத்துள்ளனர். பொய்யான புகார் தெரிவித்த அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கப் போவதாக சுந்தர் சி. கூறியுள்ளார். இருப்பினும் தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மையே என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. அவர் விளம்பரம் தேடவே இவ்வாறு பொய் புகார்கள் கூறுவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

விபச்சாரம்

விபச்சாரம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக உள்ளவர்களும், வாரிசு நடிகர்களின் பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கு சென்று விபச்சாரம் செய்து பணம் சம்பாதிப்பதாக தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. அந்த நடிகைகள் நடித்து சம்பாதிப்பதை விட வெளிநாடுகளில் விபச்சாரம் செய்து சம்பாதிப்பது தான் அதிகம் என்கிறார் அவர். சில முன்னணி நடிகைகளின் பெயர்களை தெரிவித்து புகார் கூறும் அவர் அதற்கான எந்தவித ஆதாரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது புகார் கூறிய அவர் சென்னை பயணத்தின்போது ஆதாரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தால் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. மாறாக மேலும் புகார் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X