»   »  முட்டாள் ரசிகாஸ்: இந்த வீடியோவில் மோகன்லால் என்ன செய்கிறார்னு முதல்ல சொல்லுங்க- கேஆர்கே

முட்டாள் ரசிகாஸ்: இந்த வீடியோவில் மோகன்லால் என்ன செய்கிறார்னு முதல்ல சொல்லுங்க- கேஆர்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னை திட்டுவதற்கு பதில் ஒரு பொது நிகழ்ச்சியில் மோகன்லால் தனது கையால் என்ன செய்கிறார் என்பதை மோகன்லாலின் முட்டாள் ரசிகர்கள் விளக்க வேண்டும் என்கிறார் கேஆர்கே.

மகாபாரதா கதையில் பீமராக நடிக்க உள்ளார் மோகன்லால். இந்த படம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. பட அறிவிப்பால் மோகன்லால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ஆர் கான் என்னும் கேஆர்கே மோகன்லாலை வம்பிழுத்தார்.

சோட்டா பீம்

சோட்டா பீம்

சோட்டா பீம் மாதிரி இருக்கும் மோகன்லால் எப்படி பீமராக நடிக்க முடியும். தயாரிப்பாளரின் பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என்று கேஆர்கே ட்விட்டரில் கேட்டார்.

திட்டு

திட்டு

கேஆர்கேவின் ட்வீட்டை பார்த்த மோகன்லால் ரசிகர்கள் அவரை சகட்டு மேனிக்கு திட்டி வருகிறார்கள். நேற்று முதல் சமூக வலைதளங்களில் இந்த வேலையை தான் மோகன்லால் ரசிகர்கள் செய்கின்றனர்.

இது என்ன?

என்னை திட்டுவதற்கு பதில் ஒரு பொது நிகழ்ச்சியில் மோகன்லால் தனது கையால் என்ன செய்கிறார் என்பதை அவரின் முட்டாள் ரசிகர்கள் விளக்க வேண்டும். அவர் வெட்கம் கெட்டவர் என ட்வீட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கேஆர்கே.

பீம்

மக்களே தயவு செய்து இந்த சோட்டா பீமை பாருங்கள். இந்த ஜோக்கர் பீமாக நடித்தால் அது பீமுக்கு பெரிய அவமானம் என்று கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor cum critic KRK tweeted that, 'Instead of abusing me you dumb fans of Mohanlal should explain, what he was doing with his hand in a public function. He is shameless.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil