twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

    |

    சென்னை : விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் சூர்யா, ராக்கெட்ரி படத்தில் என்ன ரோலில் நடித்தார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

    Recommended Video

    நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? | Rocketry Movie Review Tamil *Kollywood

    மாதவனின் இயக்கத்தில் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

    ஹரியோட சிறப்பான கம்பேக்.. யானை படத்திற்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்.. இதோ ட்விட்டர் ரிவ்யூ! ஹரியோட சிறப்பான கம்பேக்.. யானை படத்திற்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்.. இதோ ட்விட்டர் ரிவ்யூ!

    வாழ்க்கை வரலாறு

    வாழ்க்கை வரலாறு

    இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகியதை அடுத்து நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கினார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டது.

    மிகப்பெரிய பிளஸ்

    மிகப்பெரிய பிளஸ்

    நம்பி நாராயணனாக நடித்துள்ள மாதவன் 79 வயதான நம்பி நாராயணனின் தோற்றத்தை அடைய மேக்கப்பை மேற்கொண்டு அவரது முக அம்சங்களையும் கூட மாற்றினார். நாராயணனின் 29 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பங்களை இப்படம் சொல்வதால், தனது கதாபாத்திரத்தை வெவ்வேறு காலகட்டங்களில் சித்தரிக்க உடல் எடையை குறைத்தும் உடல் அதிகரித்தும் உள்ளார் மாதவன். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

    துணிச்சலான செய்தியாளர்

    துணிச்சலான செய்தியாளர்

    மேலும் விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கேரக்டரில் கடைசி ஐந்து நிமிடம் மிரட்டிய சூர்யா இப்படத்திலும் கௌர தோற்றத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் சூர்யா, நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் துணிச்சல் மிகுந்த செய்தியாளராக நடித்துள்ளார். விக்ரம் படத்தின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் போல் இந்த கேரக்டரும் மக்களின் மனதில் பதியும்படி இருந்ததால் சூர்யாவின் ரசிகர்கள், அவர் வரும் காட்சியை விசில் அடித்து ஆராவாரம் செய்து கொண்டாடினார்கள்.

    சம்பளம் வாங்கவில்லை

    சம்பளம் வாங்கவில்லை

    ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்க சூர்யா செய்தியாளராகவும், இந்தி பதிப்பில் ஷாருக்கானும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தில் நடிக்க எந்தவிதமான சம்பளமும் வாங்கவில்லை என்றும், படப்பிடிப்புக்காக விமானத்தில் சொந்த செலவில் வந்ததாகவும் நடிகர் மாதவன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

    English summary
    What is Suriya's character in Rocketry: The Nambi Effect?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X