"பிக் பாஸ் வீட்டில் என்னை கருப்பு கருப்புனு மட்டம் தட்டினார்".. சேரன் மீது மீரா புதிய புகார்!
சேரன் தன்னை கருப்பு என மட்டம் தட்டியதாக மீரா கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் வைத்து சேரன் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி மீரா பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இம்முறை அதிகம் மோதிக் கொண்டது சேரனும், மீராவும் தான். மீரா வீட்டிற்குள் வந்த நாள் முதல் தொடங்கிய இந்த மோதல், அவர் வீட்டை விட்டு வெளியேறும் வரை தொடர்ந்தது. சேரன் மீது அவர் சுமத்திய பழியே, மீரா வெளியேற காரணமாகவும் அமைந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள மீரா, சேரனுக்கும் தனக்குமான பிரச்சினை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த புகைப்படம்:
அதில் அவர், ‘பிக் பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பே சேரனை தான் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பார்த்திருக்கிறேன். அப்போது என் தமிழை அவர் பாராட்டினார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத்தான் நான் என் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அது தான் தற்போது வைரல் ஆகியுள்ளது.

கோபக்காரர்:
பிக் பாஸ் வீட்டிற்குள் போன நாளில் இருந்து எனக்கும் சேரனுக்கும் செட் ஆகவில்லை. அவர் சொல்வதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அவரது பேச்சை மீறி மற்றவர்கள் பேசினால் அவருக்கு கோபம் வந்து விடுகிறது. அடிக்கடி என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தார்.

தாழ்வு மனப்பான்மை:
நான் கருப்பு என தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாக சேரன் கூறினார். அதனால் தான் மற்ற பெண் போட்டியாளர்கள் என்னை அவர்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை என்றார். இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. நான் தன்னம்பிக்கையான பெண்.

பயம்:
அடிக்கடி என்னைப் பற்றி இப்படியே பேசியதால், நிஜமாகவே என்னை வீக்கான போட்டியாளராக மாற்றி விடுவாரோ என பயந்தேன். அதனால் தான் அடிக்கடி அவருடன் பிரச்சினை ஏற்பட்டது. இதைப் பற்றி நான் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலும் பேசியிருக்கிறேன். சரவணனும் இதைப் பற்றி பேசியிருக்கிறார். சேரன் பிக் பாஸ் வீட்டில் இயக்குநராகவே நடந்து கொள்கிறார்' என இவ்வாறு மீரா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











