அட.. தளபதி 65 படத்தில் விஜய்யின் கேரக்டர் இதுதானா.. லீக்கான பரபரப்பு தகவல்!
சென்னை: தளபதி 65 படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூலையும் குவித்து சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது 65வது படத்திற்கு தயாராகி வருகிறார்.

கைவிடப்பட்ட கூட்டணி
விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால்ஏஆர் முருகதாஸ் தனது கதையில் சில மாற்றங்களை செய்ய மறுத்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

தளபதி 65 படம்
இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் விஜய்யின் 65வது படத்தை இயக்கவுள்ளார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. தளபதி 65 படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் ஷெட்யூல்
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் முதல் ஷெட்யூல் ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

இன்டர்போல் அதிகாரியாக?
இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 65 படத்தில் விஜய் இன்டர்போல் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான தகவல்கள் கசிவது வாடிக்கைதான் என்றாலும் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











