For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஐஸ்வர்யா ரஜினியின் கையில் அட்டை போல் ஒட்டியிருக்கும் டிவைஸ் எதற்கு தெரியுமா?

  |

  சென்னை: சமீபகாலமாக உடற்பயிற்சியிலும், ஆரோக்கியத்திலும் அதிக கவனமும், உழைப்பும் செலுத்தி வருகின்றார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

  தினமும் தனது இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சிகள் செய்வது போல், வியர்வை சொட்ட சொட்ட புகைப்படங்களைப் பதிவு செய்து வருகின்றார்.

  இந்நிலையில், அவரது கையில் ஆர்ம்ஸ் பகுதியில் அட்டை போல் கருவி ஒன்று ஒட்டியிருப்பது பலரையும் என்னவென்று பார்க்க வைத்திருக்கிறது.

  சிறப்பாக முடிந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்.. வாய்திறக்காம இருப்பாரா பயில்வான் ரங்கநாதன்? சிறப்பாக முடிந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்.. வாய்திறக்காம இருப்பாரா பயில்வான் ரங்கநாதன்?

  குளுகோஸ் மானிட்டர்

  குளுகோஸ் மானிட்டர்

  அல்ட்ராஹியூமன்எச்கியூ என்றழைக்கப்படும் அந்தக் கருவி உடலிலுள்ள குளுகோசின் அளவை உடனுக்குடன் நமது செல்போனில் உள்ள செயலி மூலமாக நமக்கு சொல்லும் கருவியாகும். அண்மையில் கணவர் தனுஷுடன் பிரிவு, விவாகரத்து ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகு அதிக மனஅழுத்தத்தில் தவித்தார். மேலும், இரண்டு முறை உடல்நலம் குன்றி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

  டயப்பட்டீஸ் காரணமா?

  டயப்பட்டீஸ் காரணமா?

  இந்நிலையில், அண்மையில் ஐஸ்வர்யா இந்த அல்ட்ராஹியூமன் கருவியை மாற்றுவது போன்ற காணொளி ஒன்று தனியார் ஊடகத்தில் வெளியானது. அதனைக் கண்ட பலர், இக்கருவி குறித்து பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். அவற்றில், பெரும்பான்மையானோர் கூறியிருப்பது, ஐஸ்வர்யாவிற்கு ஆரம்பக்கட்ட டயப்பட்டீஸ் இருக்கலாம் என்பது தான். ஆரம்பக்கட்ட டயப்பட்டீஸ் இருப்பவர்கள் இக்கருவியைப் பயன்படுத்தி தங்களது உடலிலுள்ள குளுகோஸ் அளவை கண்கானித்துக் கொள்ள எளிதாக இருக்கும். என்றாலும், ஐஸ்வர்யா அதற்காகத் தான் பயன்படுத்துகிறாரா? அல்லது அவரது உடலில் இது தொடர்பான வேறு பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துகிறாரா? என்பது உறுதியாகவில்லை.

  அடுத்து என்ன?

  அடுத்து என்ன?

  தனுஷுடனான பிரிவிற்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் ஐஸ்வர்யா, பிரபல கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், ஆல்பம்களையும் தயாரிக்க ஐஸ்வர்யா முடிவு செய்திருக்கிறார். அண்மையில் இளையராஜாவை அவர் சந்தித்து இது குறித்துக் கலந்தாலோசித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

  தனுஷும், ஐஸ்வர்யாவும் சேரும் வாய்ப்பு?

  தனுஷும், ஐஸ்வர்யாவும் சேரும் வாய்ப்பு?

  நடிகர் தனுஷை சுற்றி ஆரம்ப காலம் தொட்டே பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் தான் இருந்தது. குறிப்பாக ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்டது. அடுத்ததாக, அமலா பால், விஜய்ஜேசுதாஸ் மனைவி, விஜய் டிவி டிடி என தனுஷ் பலருடன் கிசுகிசுக்கப்பட்டார். என்றாலும், அதற்கெல்லாம் எந்த ஒரு ரியாக்சனும் காட்டாமல் பொதுவெளிகளில் மனைவியாக தனுஷுடன் மிக காதலாகவே நடந்து கொண்டார் ஐஸ்வர்யா. பார்ட்டி ஒன்றில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக ஆடி அனைவரையும் அசத்தினார். அப்படியிருக்க, திடீரென தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்கிறோம் என அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது. அண்மையில், கூட இருவரும் ஒரு விழாவில் சந்தித்துக் கொண்டனர். ஆனால் நண்பர்கள் போலவே தங்களைக் காட்டிக் கொண்டனர். இதனை வைத்துப் பார்க்கும் போது அவர்களுக்குள் உள்ள அன்பு இன்னும் நாகரீகமாகத் தான் இருக்கிறது. மகன்கள் யாத்ரா, லிங்காவிற்காக அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது.

  English summary
  What is the Device in Ishwariya Rajinikanth Hand? What is the Use of it?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X