இப்படி அசிங்கமா திட்றாங்களே.. ஆலியா பட்டால் இத்தனை பிரம்மாண்ட படங்களின் நிலைமை என்னாகுமோ?

மும்பை: நடிகை ஆலியா பட்டின் 'சடக் 2' படத்தை பாலிவுட் ரசிகர்கள் குழி தோண்டி புதைத்து விட்டனர் என்றே சொல்லலாம்.

Recommended Video

'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்

அரை மில்லியன் லைக்ஸ் கூட வாங்காத நிலையில் 8.2 மில்லியன் டிஸ்லைக்ஸ் எகிறி வருகிறது.

கிட்டத்தட்ட 82 லட்சம் பேர் அந்த படத்துக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்கள் மனது வைத்தால்

ரசிகர்கள் மனது வைத்தால்

சாதாரண மனிதரை சூப்பர்ஸ்டாராக மாற்றவும், சூப்பர்ஸ்டாரை ஃபீல்டு அவுட் செய்யவும் ரசிகர்கள் மனது வைத்தால் முடியும். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படும் ரசிகர்கள், அதற்கு காரணமானவர்களையும், பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள் மீதும் மிகப்பெரிய கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

டார்கெட்டான ஆலியா பட்

டார்கெட்டான ஆலியா பட்

கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் யாரென்றே தெரியாது என ஆலியா பட் சொன்ன வீடியோ சமீபத்தில் வைரலானது. மேலும், இயக்குநர் மகேஷ் பட்டுக்கும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்திக்கும் தொடர்பு இருப்பதாகவும் உள்ள சர்ச்சைகள் தான் ஆலியா பட்டுக்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாக வந்து விடிந்து இருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்கள்

பெரிய பட்ஜெட் படங்கள்

அந்த தலைவலி ஆலியா பட்டை மட்டும் அல்ல அவர் நடிப்பில் உருவாகி வரும் பெரிய பட்ஜெட் படங்களையும் வச்சு செய்ய காத்திருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் ஒருவர் மீது பாசம் வைத்தால் அதற்காக உயிரையும் கொடுப்பார்கள். அதுவே குரோதம் வைத்தாலும், அவர்களின் நிலை ரொம்ப மோசமாகிவிடும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சடக் 2 நிலைமை

சடக் 2 நிலைமை

சடக் 2 படத்தின் டிரைலர் ஒரு கோடி டிஸ்லைக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனதில் இருந்தே பாலிவுட் ரசிகர்கள் நடிகை ஆலியா பட்டையும், அந்த படத்தின் இயக்குநர் மகேஷ் பட்டையும் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகும் அந்த படத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

அமிதாப் முதல் ஆலியா வரை

அமிதாப் முதல் ஆலியா வரை

ஆலியா பட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா படத்திற்கும் இதே போன்ற எதிர்ப்பு கிளம்பும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா என மல்டி ஸ்டார் நடிக்கும் இந்த படத்தின் நிலைமையும் என்ன ஆகும் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

யோசிப்பாரா ராஜமெளலி

யோசிப்பாரா ராஜமெளலி

பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட்டை போட்டு படம் எடுத்தால், வேற லெவலில் ஹிட் ஆகும் என நினைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்திற்கு ஆலியா பட்டை களமிறக்கினார் ராஜமெளலி. ஆனால், இதுவரை ஆலியா பட் அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஆலியா பட்டை நீக்குவது குறித்து அவர் முடிவெடுக்க வேண்டும் என ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களே அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கரண் ஜோஹர் படம்

கரண் ஜோஹர் படம்

ஆலியா பட்டை விட கரண் ஜோஹர் மீது தான் பாலிவுட் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பாலிவுட் மாஃபியாவின் தலைவரே அவர் தான் என்றும், நெப்போடிசத்தை வளர்த்து வருவதில் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அவரது படமான டக்ட் படத்திலும் ஆலியா நடித்து வருகிறார். நிச்சயம் இந்த படமும் மண்ணை கவ்வும் என ரசிகர்கள் கங்கணம் கட்டி கூறி வருகின்றனர்.

கங்குபாய் காத்தியாவதி

கங்குபாய் காத்தியாவதி

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகவுள்ள கங்குபாய் காத்தியாவதி எனும் பிரம்மாண்ட படத்திலும் ஆலியா பட் ஒப்பந்தமாகி உள்ளார். ராம் லீலா படத்தில் இருந்தே சுஷாந்த் சிங்கை ஆடிஷன் செய்து விட்டு நீக்கிய விசாரணை சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலியிடம் நடத்தப்பட்ட நிலையில், அந்த படத்தின் எதிர்காலம் குறித்தும் சினிமா நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X