மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
சென்னை: விளம்பரம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், புதுமுக நடிகை ஹைராவுக்கும் இடையே சண்டையாம்.
ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோரின் பேரன் அபினய் நடித்து வரும் விளம்பரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், புதுமுகம் ஹைரா என இரண்டு ஹீரோயின்கள்.
படப்பிடிப்பின்போது இரண்டு ஹீரோயின்களுக்கு இடையே சண்டை.

ஐஸ்வர்யா
காட்சிப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் ஆடுவார். அப்போது ஹைரா அவருக்கு கொலுசு மாட்டிவிட வேண்டும். இந்த காட்சியின்போது ஐஸ்வர்யாவுக்கு கொலுசு மாட்டிவிட மறுத்தார் ஹைரா.

சண்டை
ஹைராவின் செயலை பார்த்த ஐஸ்வர்யாவோ அவர் கொலுசு மாட்டிவிடாவிட்டால் பரவாயில்லை. நாம் காட்சியை வேறு விதமாக மாற்றி படமாக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.

இயக்குனர்
ஹீரோயின்களுக்கு இடையேயான பிரச்சனையை பார்த்து இயக்குனர் சாய் சூர்யா கடுப்பாகியுள்ளார். ஒழுங்கா கொலுசை மாட்டிவிடுங்க என்று ஹைராவை இயக்குனர் கண்டித்துள்ளார்.

அப்படி வா வழிக்கு
இயக்குனர் கண்டித்த பிறகு வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் காலில் கொலுசை மாட்டிவிட்டுள்ளார் ஹைரா. மேக்கப் அறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இரண்டு ஹீரோயின்களும் முரண்டு பிடித்துள்ளனர். அது என்ன பிரச்சனை என்பது தெரியவில்லையாம்.


Click it and Unblock the Notifications