ரம்யா கிருஷ்ணனை கோபப்படுத்திய வனிதாவின் வார்த்தை.. பிக்பாஸ் ஜோடிகளில் நடந்தது என்ன? பரபரப்பு புரமோ!
சென்னை: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே வெடித்த மோதல் குறித்த புரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த 4 சீசன்களிலும் பங்கேற்ற பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாய் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடி சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவமானப்படுத்தப்பட்டேன்
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் வேலை செய்யும் இடத்தில் சீனியர் பெண் ஒருவரால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மோதல் புரமோ?
இதனை தொடர்ந்து வனிதா வெளியேற காரணம் ரம்யா கிருஷ்ணனா என்ற கேள்விகள் எழுந்தன. அதற்கு பதில் அளித்த ரம்யா கிருஷ்ணன், தன்னை பொறுத்தவரை இது ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறினார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கும் வனிதாவுக்கும் இடையே மோதல் வெடித்தது தொடர்பான புரமோ வெளியாகியுள்ளது.

போட்டியாளர்களை ஒப்பிடாதீர்கள்
அதில் காடா இல்ல நாடா என தேவர்களுக்கும் காலக்கேயர்களுக்கும் இடையே நடக்கும் போட்டியாக உள்ளது. இதில் வனிதாவின் பர்ஃபாமன்ஸை நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டதாக தெரிகிறது. இதனால் கடுப்பான வனிதா, போட்டியாளர்களை ஒப்பிடாதீர்கள் என்கிறார்.

எப்படி அப்படி சொல்லலாம்?
இதனால் டென்ஷனாகும் ரம்யா கிருஷ்ணன், போட்டி என்றால் என்ன? கம்பேர் பண்ணாமல் எப்படி சொல்வது என்று கேட்கிறார். இதனை தொடர்ந்து மைக்கை கொடுத்துவிட்டு வாக்கவுட் செய்கிறார் வனிதா. இதனை கால் மேல் கால் போட்டு ஆட்டியப்படி பார்க்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
Recommended Video

புரமோவால் பரபரப்பு
ஏற்கனவே வனிதாவின் பர்ஃபாமன்ஸுக்கு ரம்யா கிருஷ்ணன் பத்துக்கு ஒரு மார்க் மட்டுமே வழங்கியதாகவும் அதனாலேயே கோபித்துக் கொண்டு வனிதா வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மோதல் புரமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











