இந்தியன் 2 படத்தில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இந்தியன் 2 படத்தில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.
படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

இந்தியன் 2 சிக்கல்
அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே. அதன்படி இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டனர். அவர்களுக்கு காட்சி இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதால் அவர்களுடைய காட்சிகளை வேறு கதாப்பாத்திரங்களை கொண்டு ரீ ஷூட் செய்யப்பட வேண்டியுள்ளது.

விலகும் காவியா அறிவுமணி
சீரியல் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலகப்போவதாக வெளியாகும் தகவல் குறித்து கூறியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதால் சீரியலில் இருந்து விலகுகிறாராம் நடிகை காவியா அறிவுமணி.

நாகார்ஜூனா வீட்டில் கொண்டாட்டம்
இதேபோல் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதாவது, நாகார்ஜூனாவின் இரண்டாவது மகனான அகில் நடிப்பில் வெளியான படஙம ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வசூலித்ததை குடும்பமாக கொண்டாடியுள்ளனர் நாகார்ஜூனாவின் குடும்பத்தினர்.

டாக்டர் படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் வசூல் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் தமிழகத்தில் 48 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளார் பிகே.

விஷாலின் 32வது படம்
விஷாலின் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஷாலின் 32 வது படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதன்படி விஷாலின் 32 வது படமாக லத்தி படம் உருவாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











