புள்ளிங்கோவுக்கு போட்டி.. ’மால்டோ கித்தாப்புள்ளே’ அர்த்தம் தெரியுமா?

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மால்டோ கித்தாப்புள்ளே’ பாடல், வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: விஜய்யின் பிகில் படத்தின் மூலம் 'புள்ளிங்கோ' என்ற வார்த்தை பிரபலமானது.

தற்போது, சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் தொடக்கம் 'மால்ட்டோ கித்தாப்புள்ளே' என்ற வரியுடன் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து அந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என கூகுளில் பலரும் தேடி வருகின்றனர்.

புள்ளிங்கோ வைரல்

புள்ளிங்கோ வைரல்

கும்பலாக சுத்துவோம் என்ற கானா பாடலில் இடம்பெற்ற ‘நம்ம புள்ளிங்க எல்லாம் பயங்கரம்' என்ற வரிகள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ‘புள்ளிங்கோ' என்ற வார்த்தை வைரலானது. வடசென்னை பகுதியில் இருக்கும் பசங்களை அவங்க ஸ்லாங்கில் சொல்வது தான் ‘புள்ளிங்கோ'. மேலும், விஜய் நடிப்பில் வெளியான பிகில் வெறித்தனம் பாடலில், ‘புள்ளிங்கோ இருக்காங்க வேறு என்ன வேணும்' என விஜய் பாட, அதன் ரீச் இந்தியளவில் டிரெண்டானது.

கூகுளில் எப்படி கிடைக்கும்

கூகுளில் எப்படி கிடைக்கும்

புள்ளிங்கோ போன்றே வடசென்னை வாசிகள் அதிகம் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான வார்த்தை தான் 'மால்டோ கித்தாப்புள்ளே'. இதனை முதல் வரியாக கொண்டு யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் தர லோக்கல் பாடல் வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளன்று வெளியாகிறது. மால்டோ கித்தப்புள்ளே என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூகுளில் தேடி வருகின்றனர். ஆனால், அங்கு எப்படி அதற்கான அர்த்தம் கிடைக்கும்.

என்ன தான் அர்த்தம்

என்ன தான் அர்த்தம்

மால்டோ என்பது பூஸ்ட், ஹார்லிக்ஸ் போல ஒரு வகை ஹெல்த் ட்ரிங்க். பூஸ்ட், ஹார்லிக்ஸ் வருவதற்கு முன்பு இந்த மால்டோ தான் பிரபலமானது. புள்ளிங்கோ வார்த்தையை போல, கொஞ்சம் தவுலத்தா, கெத்தா, கொஞ்சம் ரிச்சா இருக்கிற பசங்களை மால்டோ கித்தாப்புள்ள என மற்ற புள்ளிங்கோ கூப்பிடுவது வழக்கம். அதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம்.

தர லோக்கல்

ராயபுரம் லோக்கல், கருத்தவன்லாம் கலீஜா போன்ற பாடல்களை தொடர்ந்து, மீண்டும் ஒரு தர லோக்கல் பாடலை சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களுக்கு தர உள்ளார். படிச்ச நாயே கிட்ட வராதே பாடலை போட்ட யுவன் சங்கர் ராஜா, மால்டோ கித்தாப்புள்ள பாடலை வேற லெவலில் உருவாக்கியுள்ளாராம். வரும் 7ம் தேதி நிச்சயம் புள்ளிங்கோ மட்டுமில்லாமல், தமிழ் ரசிகர்களை ஆட வைக்கும் பாடலாக இந்த பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

More from Filmibeat

Read more about: hero ஹீரோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X