Don't Miss!
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பட்டத்து அரசன் படத்தில் கூறப்பட்டுள்ள தாரப் பங்கு என்றால் என்ன... இயக்குநர் சற்குணம் விளக்கம்
சென்னை: சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மண் சார்ந்த திரைப்படங்களில் கைதேர்ந்தவரான சற்குணம் இந்த முறையும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஊர் சார்ந்த விஷயங்கள் பற்றி படமாக்கி இருக்கிறார்.
இந்தப் படம் தொடர்பாக கொடுத்துள்ள ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை சற்குணம் கூறி இருக்கிறார்.
அதர்வா, ஹரீஷ் கல்யாணை விட எனக்கு இந்தக் கதாபாத்திரம் பொருந்தும்..லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் பேட்டி

பொத்தாரி சின்ன துரை
தனது ஊர் அருகே ஒரு கபடி குழு முழுக்க ஒரே குடும்பத்தினர் விளையாடுவதை பார்த்து அதிலிருந்து ஊக்கம் பெற்று எழுதப்பட்ட படம்தான் பட்டத்து அரசன். பன்னீர்செல்வம் என்ற ஒரு கபடி விளையாட்டு வீரர் தஞ்சாவூர் அருகே மிகவும் பிரபலமாக இருந்தவராம். அவரை அனைவரும் பொத்தாரி என்றுதான் அழைத்தார்களாம். அதனால் ராஜ்கிரன் கதாபாத்திரத்திற்கு பொத்தாரி என்றும் மற்றொரு பிரபலமான கபடி வீரரான சின்னதுரை என்பவரின் பெயரை அதர்வாவுக்கும் சூட்டியிருக்கிறார் சற்குணம்.

ஜிப்ரான் இசை
வாகை சூடவா திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகம் செய்தது சற்குணம்தான். இப்போது இந்தப் படத்திலும் இருவரும் ஒன்றாக பணிபுரிந்துள்ளார்கள். தான் அறிமுகப்படுத்திய ஒரு இசையமைப்பாளர் உத்தமவில்லன், பாபநாசம் ராட்சசன், துணிவு போன்ற பல படங்களில் இசையமைப்பாளராக பணி புரிந்தது தனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். பட்டத்து அரசன் படத்திற்கு உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் நிறைய இருப்பதால் பின்னணி இசை முக்கியமாக தேவைப்பட்டது அதற்காகத்தான் ஜிப்ரானை ஒப்பந்தம் செய்தேன் என்று சற்குணம் கூறியுள்ளார்.

பயிற்சி
ஒரு விளையாட்டு வீரருக்காண தகுதி அனைத்துமே அதர்வாவிற்கு இருக்கிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்தப் படத்தில் அவருக்கு சரியாக கபடி விளையாட தெரியாத கதாபாத்திரம். மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் கபடி பயிற்சி அளிக்கப்பட்டதாம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்பதால் தனது வேலை சுலபமாகி விட்டதாக சற்குணம் கூறியிருக்கிறார்.

தாரப் பங்கு
தமிழ் சினிமாவில் தாரப் பங்கு என்ற சொல் மிகவும் புதிதாக கேள்விப்படுகின்ற ஒன்று. ஒரு நபருக்கு 2 மனைவிகள் இருந்தால் ஒரு மனைவிக்கு 10 பிள்ளைகளும் இன்னொரு மனைவிக்கு ஒரு பிள்ளையும் இருந்தால், அந்த நபரின் சொத்து பிரிக்கப்படும் பொழுது 11 பிள்ளைகளுக்கு என்று பிரிக்காமல் 2 மனைவிகளுக்கும் சரிசமமாக சொத்துக்கள் வழங்கப்படுமாம். அதாவது, 10 லட்சம் சொத்து என்றால் 5 லட்சம் ஒரு மனைவிக்கும் 5 லட்சம் இன்னொரு மனைவிக்கும் போகுமாம். 10 பேர் இருப்பவர்கள் 5 லட்சத்தை பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பிள்ளையாக இருப்பவர் அந்த 5 லட்சத்தையும் முழுதாக எடுத்துக் கொள்ளலாம். இதுதான் தாரப்பங்கு என்பது. இதனை பட்டத்து அரசன் படத்தில் கூறியிருக்கிறார் சற்குணம்.