For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நன்றியை மறந்து விட்டாரே தனுஷ்… ரஜினி மீது அப்படி என்ன கோபம்?

  |

  சென்னை : நடிகர் தனுஷ் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார் தனுஷ். அது தற்போது பேசுபொருளாகி உள்ளது.

  20 ஆண்டுகால தனுஷின் சினிமா வாழ்க்கையில் 19 ஆண்டுகாலம் ரஜினியின் நிழலில் இருந்த தனுஷ், நன்றி மறந்துவிட்டாரே என சோஷியல் மீடியாவில் பலர் பேசி வருகின்றனர்.

  அப்படி தனுஷுக்கு ரஜினி மீது என்ன...விவாகரத்து பிரச்சனைதான் காரணமா என பலவிதமாக தகவல்கள் பரவி வருகின்றன.

  சிவகார்த்திகேயனை பார்த்தால் பொறாமையாக உள்ளது.. நடிகர் தனுஷ்!சிவகார்த்திகேயனை பார்த்தால் பொறாமையாக உள்ளது.. நடிகர் தனுஷ்!

  துள்ளுவதோ இளமை

  துள்ளுவதோ இளமை

  துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் தனுஷ். அப்பா கஸ்தூரி ராஜாவால் முதல் படத்திலே ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. அந்த படத்தில் சில கசமுசா காட்சிகள் இருந்தால், அனைத்து வயதினரும் பார்க்கும் படமாக இல்லை. இதனால், சில நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

  பிரிந்தனர்

  பிரிந்தனர்

  சினிமாவில் அடியெடுத்து வைத்த தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்தார். தனுஷ், ஐஸ்வர்யா காதல் விவகாரம் தெரிந்ததும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் தடபுடலாக திருமணத்தை நடத்தி முடித்தார் ரஜினி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்த்து வந்த இந்த நட்சத்திர ஜோடி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

  பல விதவதந்திகள்

  பல விதவதந்திகள்

  இவர்கள், இருவரையும் சேர்த்து வைக்க பல கட்ட முயற்சிகளை எடுத்த போதும், தனுஷ் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் கருத்துவேறுபாடுக்கான காரணம் என்ன வென்று தெரியாததால் ஊடகங்களில் பலவிதமான வதந்திகள் பரவின ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

  20 ஆண்டு திரைப்பயணம்

  20 ஆண்டு திரைப்பயணம்

  இதையடுத்து, நடிகர் தனுஷ் திரைத்துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், திரையுலகில் நான் என் வாழ்க்கையைத் தொடங்கி இரண்டு தசாப்தங்கள் ஆகின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் துள்ளுவதோ இளமை தொடங்கும் போது நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

  அனைவருக்கும் நன்றி

  அனைவருக்கும் நன்றி

  அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. என்னுள் இருக்கும் நடிகரை அடையாளம் காட்டிய என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி. இறுதியாக என் அம்மாவிற்கு நன்றி, அவருடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னைப் பாதுகாத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது என கூறியிருந்தார்.

  ரஜினி பல உதவிகள்

  ரஜினி பல உதவிகள்

  தனுஷ் அந்த கடிதத்தில், ரஜினிக்கு நன்றி தெரிவிக்காதது பலரை கவலை அடையச்செய்துள்ளது. தனுஷிற்கு ரஜினி பல உதவிகளை செய்துள்ளார். தனுஷை வைத்து ஐஸ்வர்யா 3 என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் பாடல் ஹிட்டான போதும் படம் மிகப்பெரிய தோல்வியைத்தழுவியது. இதனால், கடனில் சிக்கினார் தனுஷ். அவரின் கடனை அடைக்க காலா படத்தை இலவசமாக நடித்து கொடுத்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.

  நன்றி மறந்துவிட்டார் தனுஷ்

  நன்றி மறந்துவிட்டார் தனுஷ்

  மேலும், தனுஷ் ரஜினியின் மருமகன் என்பதால் தான் பாலிவுட்டிலும் அவருக்காக மரியாதை கிடைத்தது. இன்று ஹாலிவுட்டில் தடம் பதிக்கவும் இதுதான் காரணமாக கூறப்படுகிறது. விவாகரத்து விஷயத்திலும் தலையிடாமல் பெருந்தன்மையுடன் எவ்வித எதிர் கருத்தும் சொல்லாமல் இதுவரை அமைதியாகவே இருக்கிறார் ரஜினி. ஆனால், தனுஷ், ரஜினியால் தான் நாம் வளர்ந்தோம் என்பதை மறந்து விட்டார்.

  அப்படி என்ன கோவம்?

  அப்படி என்ன கோவம்?

  குறைந்தபட்சம் அந்த அறிக்கையில், ரஜினியின் பெயரையாவது குறிப்பிட்டு இருக்கலாம். தனுஷ் குறிப்பிடாததற்கு என்ன காரணம், தனுஷிற்கு ரஜினி மீது அப்படி என்ன கோவம்? இவர் கோபப்படும் அளவுக்கு ரஜினி அப்படி என்ன செய்துவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பலர் பேசி வருகின்றனர்.

  English summary
  Dhanush and Rajinikanth : 20 ஆண்டுகால தனுஷின் சினிமா வாழ்க்கையில் 19 ஆண்டுகாலம் ரஜினியின் நிழலில் இருந்த தனுஷ், நன்றி மறந்துவிட்டாரே என சோஷியல் மீடியாவில் பலர் பேசி வருகின்றனர்.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X