Shalu Shamu : ஷாலு ஷம்முவின் ஐபோன் காணாமல் போனதில் பின்னணியில் இருக்கும் மர்மம்?
சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் தொலைந்து போனதில் மிகப்பெரிய மர்மம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமானார்.

காணாமல் போன ஐபோன் : நடிகை ஷாலு ஷம்மு கடந்த மாதம் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். பார்ட்டி முடிய தாமதமானதால், சூளைமேட்டில் தன் நண்பர் வீட்டில் அன்றிரவு தங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, ரூ.2 லட்சம் மதிப்பில் ஐ போன் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
காவல் நிலையத்தில் புகார் : அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் என்று வந்ததால், பதறிப்போன ஷாலு, நண்பர்களிடம் விசாரித்துவிட்டு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தேடி உள்ளார். அங்கும் செல்போன் கிடைக்காததால், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
பார்சலில் வந்த போன் : நடிகையின் புகாரின் பேரில் அவரின் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு வந்த பார்சலில் ஐபோன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தான் சந்தேகப்பட்ட நபர் தான், தனது போனை திருடியதாகவும் எட்டு வருட நட்பு அர்த்தமற்றுப் போனதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

பின்னணியில் உள்ள மர்மம் : இந்நிலையில், நடிகை ஷாலு ஷம்முவை பழிவாங்கும் நோக்கத்தோடு அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் ஐபோனை திருடி, அந்த போனில் இருந்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாலு ஷம்முவை பழிவாங்கத்தான் அந்த நபர் ஐ போனை திருடியதாவும், இதுகுறித்தும் ஷாலு காவல்நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











