ஆஹா இவ்வளவா.. கேட்கவே வியப்பா இருக்கே.. பப்லு ப்ரித்விராஜின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ப்பா

சென்னை: தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் பப்லு ப்ரித்விராஜின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பப்லு ப்ரித்விராஜ் ஊடகங்களில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை விட தன்னை விட பல மடங்கு வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

நடிகர் பப்லு ப்ரித்விராஜ் பல காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். படங்களில் பல முக்கிய ரோல்களில், நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்து வந்து இருக்கிறார்.

பப்லு ப்ரித்விராஜ்

பப்லு ப்ரித்விராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடா, மொழிகளில் பல்வேறு படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். இதையடுத்து தமிழ் சீரியல்களிலும் இவர் அறிமுகம் ஆனார். 1990ல் இருந்து இவர் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இடையில் கொஞ்சம் சீரியல்களில் இருந்து பிரேக் எடுத்தவர் தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். பப்லு ப்ரித்விராஜ் நான் வாழ வைப்பேன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1979ல் இவர் அந்த படத்தில் பப்லு என்ற பெயரில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இவரின் பெயர் பப்லு ப்ரித்விராஜ் என்று மாறியது.

பிரேக்

பிரேக்

அதன்பின் சிறிய பிரேக் எடுத்தவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முறை மலையாள படங்களில் இவர் சிறிய சிறிய ரோல்களில் நடித்து வந்தார். அதையடுத்து பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் இவருக்கு வாய்ப்புவழங்கப்பட்டது . அந்த படத்தில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதன் விளைவாக அவள் வருவாளா படத்தில் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அதை தொடர்ந்து வரிசையாக சீரியல்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2000களில், ரமணி வெர்சஸ் ரமணி சீரியல்களிலும், நாகா இயக்கிய மர்ம தேசம் என்ற சூப்பர்நேச்சுரல் த்ரில்லரிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.

மர்ம தேசம்

மர்ம தேசம்

முக்கியமாக மர்ம தேசத்தில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. ஜெயா டிவியில் சவால் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அவர் ராதிகாவின் அரசி சீரியலில் திருநங்கை ரவுடியாக நடித்தார். அதில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. 1994ல் இவர் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை தொடர்ந்து இவர்களுக்கு ஆட்டிசம் உள்ள குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் சில வருடங்களுக்கு முன் பிரிந்தனர். நீண்ட காலமாக தனியாக வசித்து வந்த பிரித்விராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஷீட்டல்

ஷீட்டல்

23 வயதே ஆன ஷீட்டல் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில்தான் தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகர் பப்லு ப்ரித்விராஜின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அவரிடம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா, சீரியல்கள் மூலம் பெற்ற வருமானம் காரணமாக மட்டும் இவ்வளவு சொத்துக்கள் வரவில்லை. அவருக்கு சொந்தமாக டீ ஷாப் இருக்கிறது. அதில் இருந்து இவ்வளவு தொகையை அவர் ஈட்டியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X