'ஜானகி' என்ற பெயரில் படம் இருந்தால் என்ன பிரச்னை? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி!
சென்னை: ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா என்ற மலையாள திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், படத்தின் தலைப்பையும் கதாநாயகியின் பெயரையும் மாற்றுமாறு மத்திய திரைப்பட வாரியம் அறிவித்ததை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்சார் வாரியத்திடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜானகி vs கேரளா மாநிலம் எனப்படும் JSK படத்தை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில், சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நீதிமன்றத்தில் வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதியை போராடி பெற்றுக்கொடுக்கு வழக்கறிஞராக சுரேஷ் கோபியும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஜானகி வேடத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். மேலும், மாதவ் சுரேஷ், திவ்யா பிள்ளை, பைஜு சந்தோஷ், கோட்டயம் ரமேஷ், ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தை காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் எடிட்டிங் சம்ஜித் முகமது, ஒளிப்பதிவு ரெனாதிவே, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஜானகி vs கேரளா மாநிலம்: சுரேஷ் கோபி நடித்த ஜே.எஸ்.கே திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாக இருந்த நிலையில், இத்திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், சீதா தேவியின் மற்றொரு பெயரான ஜானகியின் பெயர், படத்தில் தாக்குதலை எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், படத்திற்கு மத்திய தணிக்கைகுழு தடை விதித்து படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும், படத்தின் பெயரை மாற்றும் படியும், கதாபாத்திரத்தின் பெயரை மாற்றும் படி உத்தரவிட்டு இருந்தது. இதுகுறித்து, படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன், மத்திய தணிக்கை குழு திரையிடல் சான்றிதழை மறுத்ததாகக் கூறி, தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை எதிர்த்து மலையாள திரைப்பட நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய தணிக்கை குழு வாரியத்தின் முன்பு ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர்.
என்ன பிரச்சனை: இதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்து வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் சென்சார் வாரியத்திடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜானகி என்ற பெயரில் என்ன தவறு என்று உயர் நீதிமன்றம் சென்சார் வாரியத்திடம் கேட்டுள்ளது. கடந்த காலங்களில் சீதா, ராம் என்கிற பெயர்களை கொண்ட படங்கள் வந்துள்ளன. அப்போது, எந்த பிரச்சனையும் இல்லாதபோது. இப்போது ஏன், இந்த பிரச்சனை என்று நீதிமன்றம் கேட்டுள்ளது. சென்சார் வாரியமும், ரிவைஸிங் கமிட்டியும் ஜே.எஸ்.கேக்கு அனுமதி மறுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.
மீண்டும் விசாரணை: படத்தின் பெயர் வழிகாட்டத்திற்கு எதிரானது என்றும் 16 வயதுக்குட்ட குழந்தைகள் அதை பார்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சென்சார் வாரியம் பதில் அளித்துள்ளது. அதே போல படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தின் பெயரை மாற்ற முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனு திங்கட்கிழமை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பரிசீனைக்கு வரும், என்றும், சென்சார் வாரியத்தின் தீர்ப்பின் நகலை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











