வேட்டையன் புரமோஷன்.. கூலி ஷூட்டிங்.. திடீரென ரஜினிகாந்த் உடல் நலனுக்கு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் கவலை!

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுமார் 50 நிமிடங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 73 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்திற்கான புரமோஷன் பணிகளில் எந்தவொரு தடையும் வராமல் அந்த புரமோஷனுக்கு வருவதை தவிர்க்காமலும் கலந்துக் கொண்டு கலக்குகிறாரே என திரைத்துறையே திகைத்துப் போனது.

அனிருத்துடன் இணைந்து மேடைக்கு முன்பாக மனசிலாயோ பாடலுக்கு ரஜினிகாந்த் ஆட்டம் போட்டதை பார்த்து யாரெல்லாம் கண் வைத்தார்களோ தெரியவில்லை. திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என ட்விட்டரில் #Rajinikanth ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

rajinikanth vettaiyan coolie

வேட்டையன் படத்தின் புரமோஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு என ஓய்வு எடுக்காமல் எந்திரன் போல சூப்பர் ஸ்டார் இந்த வயதிலும் வேலை பார்த்து வருவது தான் அவரது திடீர் உடல்நலக்குறைவுக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த் நலமாக உள்ளார்: நேற்று இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

வேட்டையன் ஆடியோ லாஞ்ச்: வரும் அக்டோபர் 10ம் தேதி த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் படம் வெளியாகிறது. அக்டோபர் 2ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. கடந்த செப்டம்பர் 20ம் தேதி வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக கூலி படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு சென்னைக்கு வந்து இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று பேசியிருந்தார்.

கூலி படத்துக்காக ரிஸ்க் எடுக்கும் ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கார்த்தி, கமல்ஹாசன், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து ஆக்‌ஷனில் மிரட்டிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் பிஜிஎம் போட்டு நடந்து வந்ததை போல வராமல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிக ரிஸ்க் எடுத்து சூப்பர் ஸ்டார் நடித்து வருவது தான் அவரது உடல்நிலை திடீரென சீரற்ற நிலைக்கு செல்லக் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ரசிகர்கள் பிரார்த்தனை: #Rajinikanth ஹாஷ்டேக்கை பதிவிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். வேட்டையன் படத்திற்கான டிக்கெட் முன் பதிவு உலகளவில் அதிக வசூலை வசூல் செய்து வரும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் டிக்கெட் முன் பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இந்த வயதிலும் ரசிகர்களுக்காக ஓய்வெடுக்காமல் நடித்து வரும் நிலையில், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டே தலைவர் நடிக்கட்டும் என்றும் அவரை போட்டு டார்ச்சர் பண்ணாதீங்கப்பா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X