பருத்தி வீரன் படத்தில் ஆரம்பித்த பஞ்சாயத்து.. அமீருக்கும் கார்த்திக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை?

சென்னை: கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படம் வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் நடைபெற்ற அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களையும் இயக்குநர்களையும் அழைத்திருந்தார். ஆனால், தன்னை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய அமீரை மட்டும் அழைக்கவில்லை.

இதுதொடர்பாக சமீபத்தில், அமீரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கு மான ரோஷம் இருக்கு அழைக்காத இடத்துக்கு செல்ல மாட்டேன் எனக் கூறிவிட்டார். இந்நிலையில், இருவருக்கும் இடையே என்ன தான் பிரச்சனை என கிளம்பிய கேள்விக்கு அந்தணன் சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

What is the real rift between Karthi and Ameer?

அமீர் இயக்கத்தில் அறிமுகம்: நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், இயக்குநர் அமீர் அண்ணன் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கியது போல தம்பிக்கும் ஒரு படத்தை கொடுப்போம் என பருத்தி வீரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே கார்த்தியின் நடிப்பும், பிரியாமணியின் நடிப்பும் படத்தின் கதையும் ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களை கவர்ந்தன.

என்ன பிரச்சனை: பருத்தி வீரன் படத்தை திட்டமிட்ட நேரத்தில் முடிக்காமல் பர்ஃபெக்‌ஷன் பார்த்து பார்த்து படத்தை செதுக்கிய நிலையில், பல காலங்களை அமீர் வீணடித்தது தான் கார்த்திக்கும் அமீருக்கும் இடையே பிரச்சனை வெடிக்க காரணம் என அந்தணன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கைகலப்பு வரை: பெரிய இடத்து வாரிசு நடிகரான கார்த்தியிடம் அமீர் கடுமையாக நடந்து கொண்டதும் கைகலப்பு வரை சென்றது தான் படம் அந்தளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையிலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் குறையாமல் இருக்க காரணம் என்கின்றார்.

ஜப்பான் ஜெயிக்குமா?: இந்த முறை ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் மோதுகிறது. இரண்டு படங்களில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X