படுக்கையறையில் சடலமாக கிடந்த இளம் நடிகை... மரணத்திற்கான காரணம் இதுதான்.. வெளியான திடுக் தகவல்!
கொல்கத்தா: சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடித்த நடிகை ஆர்யா பானர்ஜியின் மர்ம மரணத்திற்கான திடுக் காரணம் வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு வெளியான மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் மற்றும் பெங்காலி நடிகை ஆர்யா பானர்ஜி.
இந்தப்படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் ஆர்யா பானர்ஜி. இந்நிலையில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார்.

ரெஸ்பான்ஸும் செய்யவில்லை
இவர் கடந்த வெள்ளிக்கிழமை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என தெரிகிறது. விட்டு பணியாளர் நீண்ட நேரமாக காலிங் பெல்லை அடித்தும் ஆர்யா பானர்ஜி எந்த ரெஸ்பான்ஸும் செய்யவில்லை.

இறந்து கிடந்தார்..
இதனால் சந்தேகமடைந்த பணியாளர் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூற அவர்கள், போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப் போது ஆர்யா பானர்ஜி தனது வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மரணம் கொலையா?
33 வயதே ஆன ஆர்யா பானர்ஜியின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகை ஆர்யா பானர்ஜியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தற்போது வெளிவந்துள்ளது.

ஆல்கஹால் இருந்தது உறுதி
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி ஆர்யா பானர்ஜி கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த ரிப்போர்ட்டில் அவரது உடலில் ஆல்கஹால் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆல்கஹால் அதிகமாக பயன்படுத்தியதல்தான் அவரது மரணம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரபல சித்தாரிஸ்ட் மகள்
இதன்மூலம் ஆர்யா பானர்ஜியின் மரணத்திற்கான காரணம் தற்போது ஆல்கஹால் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ஆர்யா பானர்ஜி பிரபல சித்தாரிஸ்ட்டான நிகில் பான்டிபோதியாயின் மகள் ஆவார். மாடலிங் துறையில் உள்ள அவர் பல பாலிவுட், வங்காளமொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











