கமல்ஹாசன் இல்லாமல் என்னாகும் பிக் பாஸ்.. கமல் விலக காரணம் இதுதானா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. அப்படி மற்றவர்கள் தொகுத்து வழங்கினால் அதில் எந்த சுவாரசியமும் இல்லை என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
வெளிநாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பிரதர் நிகழ்ச்சி தான். இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் இந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. திரையில் நாம் பார்த்து வியந்து போன பிரபலங்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்துப்போனது.

பிக் பாஸ் சீசன் 1: இதையடுத்து, விஜய் டிவியில் 2017ம் ஆண்டு பிக் பாஸ் ஒளிபரப்பான முதல் சீசனில் நமிதா, ஓவியா, காயத்ரி ரகுராம், சக்தி வாசு, ஆர்த்தி, சினேகன், ஜூலி, ஆரவ் என பலர் கலந்து கொண்டனர். பிக் பாஸ் இன்னும் எத்தனை சீசன் வந்தாலும், இந்த முதல் சீசனுக்கு ஈடு இணை இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு சீசன் சும்மா பக்காவாக இருக்கும். அதுவும் குறிப்பாக ஓவியா, ஜூலி விவகாரத்தில் கமல் போட்டுக்காட்டிய குறும்படம் தான் ஹைலைட்.
விலகினார்: முதல் சீசனைத் தொடர்ந்து இரண்டு, மூன்று என தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசனை கடந்து எட்டாவது சீசனை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன். ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் கமல் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
என்னவாகும் பிக்பாஸ்: கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் கொடுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் வெளியேறி இருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்றும், அடுத்து யார் தொகுத்து வழங்கினாலும், அது கமல் தொகுத்து வழங்கியது போல இருக்காது, வார கடைசி நாட்களில் அவரின் பேச்சு கேட்கத்தான் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவரும் போய்விட்டால் பிக் பாஸ் அவ்வளவுதான் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விக்ரம், இந்தியன் 2, தேர்தல் பிரச்சாரம் என படு பிஸியாக இருந்தே போதே கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் தற்போது விலக என்ன காரணம் என பிக் பாஸ் பிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுதான் காரணமா: கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக போட்டியாளர்களைத் தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வார்கள். ஆனால், கடந்த முறை கமலை மாற்ற வேண்டும் என்று இணையத்தில் எதிர்ப்பு குரல் எழுந்தன. இதன் காரணமாகத்தான் அவர் விலகுகிறார் என்றும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











