ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்த மனைவி.. விவகாரத்துக்கு காரணம் என்ன? கனத்த இதயத்தோடு சாய்ரா பானு எடுத்த முடிவு!
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளது. அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் சாய்ரா பானுவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். வரும் மார்ச் மாதம் வந்தால், இந்த தம்பதிகள் 30ஆண்டுகள் திருமண வாழ்க்கையை கடந்திருப்பார்கள். இந்நிலையில் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கணவரை பிரிந்து வாழ முடிவு செய்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

வேதனையில் எடுத்த முடிவு: பத்திரிகையாளர்களுக்கு அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து, நான் கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எங்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு எடுத்த முடிவாகும். நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், எங்களுக்கு இடையில், பதற்றம், தீர்க்க முடியாத இடைவெளி இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சாய்ரா பானு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
29 வருட வாழ்க்கை போச்சு: ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன், சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் சில பாடல்களை பாடி இருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமானும் எந்திரன் தொடங்கி பொன்னியின் செல்வன் 2 வரை பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் பாடி இருக்கிறார். இவருக்கு கடந்தாண்டு, ரியாசுதீன் ஷேக் என்கிற சவுண்ட் இன்ஜினியருடன் திருமணம் நடந்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து முடிந்த பிறகு, சாய்ரா பானு இந்த விவாகரத்து முடிவு எடுத்து இருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











