லியோ ஆடியோ லான்ச் கேன்சலுக்கு என்ன காரணம்?.. மௌனம் கலைத்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ படம் நாளை ரிலீஸாவதையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
லியோ படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி நாளைய தினத்தை கொண்டாடுவதற்கு தளபதி ரசிகர்கள் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்கள். இதற்காக இப்போதிலிருந்தே விதவிதமான போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி முதல் நாளே லியோ படம் வசூலில் பெரும் சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

பிரச்னை: இப்படி விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு இருந்தாலும் அவர்களுக்கு சோகம் தரும் விதமாக சில பிரச்னைகள் கடந்த சில நாட்களாக நடந்தன. அதாவது லியோ படத்தின் டிக்கெட் அதிக ரேட்டில் விற்கப்படுகிறது என்ற விமர்சனம் முதலில் எழுந்தது. அதன் பிறகு படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி அளிக்கப்பட்டாலும் அந்த காட்சி 9 மணிக்குத்தான் திரையிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆர்டர் போட; அதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது. ஆனால் நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டது.
ஸ்ட்ரிக்ட் ஆர்டர்: இதனையடுத்து மீண்டும் தமிழ்நாடு அரசிடம் வந்த படத்தயாரிப்பு தரப்பு 7 மணி காட்சியாவது வேண்டும் என்று கேட்டது. ஆனால் 9 மணி காட்சிக்கு மட்டும்தான் அனுமதி என்று அரசு ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டது. எனவே காலி 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. அதேபோல் சென்னை ரோகிணி தியேட்டரில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
என்ன காரணம்: லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதை ரோகிணி தியேட்டர் தன்னுடைய ஸ்க்ரீனில் திரையிட்டது. அதை விஜய் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தியேட்டரின் சீட்டுக்களை நாசமாக்கிவிட்டனர். இதனால் ரோகிணி தியேட்டர் நிர்வாகத்துக்கு பத்து லட்சம் ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால்தான் லியோவை அந்த தியேட்டர் திரையிடவில்லை என்று கருதப்படுகிறது.
லோகேஷ் பத்திரிகையாளர் சந்திப்பு: இந்நிலையில் லியோ படம் நாளை ரிலீஸாவதையொட்டி லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " ரோகிணி தியேட்டர் சீட்டுக்களை உடைத்திருக்கக்கூடாது. ஒரு தியேட்டரில் ட்ரெய்லர் வர வேண்டுமென்றால் சென்சார் செய்திருக்க வேண்டும். நாங்கள் யூட்யூபில் போட்டிருந்தோம்.
இதான் காரணம்: திரையரங்குகளே நாங்கள் யூட்யூபில் போட்ட லிங்க்கை எடுத்து தியேட்டரில் போட்டிருக்கிறார்கள். டிக்கெட் வாங்கி கவுண்ட்டரில் விடுவது வேறு ஃப்ரீ பாஸில் விடுவது வேறு. இத்தனை பேர்தான் இருக்க முடியும் என்கிற இடத்தில் மூன்று மடங்கு ஆட்கள் இருந்தால் இதுமாதிரியான கலவரங்கள் நடக்கத்தான் செய்யும். ஆடியோ லான்ச்சை தவிர்த்ததற்கு இதுபோன்ற எந்த விஷயமும் நடந்துவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











