twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலி படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? பலருடைய கேள்விக்கு ஆணித்தனமாக பதில் சொன்ன நடிகர் நட்டி!!

    |

    சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது

    விஜய் தான் நடிக்கும் படங்களில் எந்த அளவுக்கு மாஸ் காட்சிகள் இருக்கிறதோ அதே அளவிற்கு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையில் படங்களில் நடித்து வருகிறார்

    இந்த நிலையில் விஜய்யில் திரை வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான புலி படம் பிளாப் ஆனதற்கு காரணம் குறித்து நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

     “பெண்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை“.. கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பேச்சு ! “பெண்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை“.. கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பேச்சு !

    காமெடியும் செய்வது

    காமெடியும் செய்வது

    தலைமுறைகள் கடந்து விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கின்றனர். விஜய்யின் திரைப்படங்களில் மாஸ் இருக்கும் அளவிற்கு காமெடியும் செய்வது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் சமீபத்திய படங்களும் அதே பார்முலாவில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் ஆக்சன் கதை களத்தில் காமெடி கலந்து எடுக்கப்பட்டது.

    இரு மொழிகளில்

    இரு மொழிகளில்

    பெரும் எதிர்பார்ப்பு வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கவுள்ளார்

    முதல் முறையாக ஃபேண்டஸி கதை களத்தில்

    முதல் முறையாக ஃபேண்டஸி கதை களத்தில்

    புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவது மட்டுமல்லாமல் புது புது கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட விஜய் முதல் முறையாக ஃபேண்டஸி கதை களத்தில் நடித்த திரைப்படம் புலி. இம்சை அரசன் 23ம் புலிகேசி,அறை என் 305ல் கடவுள் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் ஃபேண்டசி இயக்குனர் என பெயரெடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் உருவான புலி படம் மிகவும் வித்தியாசமான ஃபேண்டசி திரைப்படமாக வெளியானது.

    புலி தோல்விக்கு காரணம்

    புலி தோல்விக்கு காரணம்

    மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி புலி திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஃபேண்டஸி திரைப்படம். சிம்புதேவன் அப்படித்தான் அந்த படத்தை இயக்கினார். குழந்தைகளுக்காகவும் குடும்ப ரசிகர்களுக்காகவும் மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் ப்ரமோட் செய்யும் போது விஜய்யின் மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக ப்ரமோட் செய்ததால் பெரிதும் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படம் திருப்திப் படுத்தவில்லை.பிரம்மாண்டமாக ப்ரமோட் செய்தால் எதிர்பார்பாப்பும் அதிகமாகும்.அந்த எதிர்பார்ப்பு திரையில் வரவில்லை என்றால் வசூல் ரீதியாக வெற்றி பெறுவது கஷ்டம்.இதுவே புலி படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று அப்படத்தின் ஒளிப்பதிவாளர் நடிகர் நட்டி தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    English summary
    What is the Reason for Puli movie Failure Reveals Actor Natti
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X