விஜயகாந்த் கடவுளிடம் சேர்ந்துவிட்டார்.. கழுகு வட்டமிட காரணம்.. பிரபலம் சொல்வது என்ன!

சென்னை: விஜயகாந்தின் உறுதி ஊர்வலத்தின் போது கருட பகவான் வட்டமிட்டது குறித்து பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இறந்ததாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

What is the reason for the circled karudan at Vijayakanth funeral?

இதை தொடர்ந்து, அவரின் உடல் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

3 முறை வட்டமிட்ட கருடன்: அப்போது, விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்து சென்ற போது கருடன் வானில் 3 முறை வட்டமிட்டது. இதைப்பார்த்த விஜயகாந்த் பிரேமலதா, மகன்கள் உட்பட அங்கிருந்த மொத்த கூட்டமும் கருடனை கைகூப்பி வணங்கினர். இந்த காட்சிகாண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,இதுகுறித்து பாலாறு சுவாமிகள் பேட்டி அளித்துள்ளார்.

கருட பகவான்: இதில் ஜாதகம்,சோதிடம் என எல்லாத்தையும் மறந்துவிடுங்கள், கருடன் பெருமாளின் சேவகன். எந்த பெருமாள் கோவிலுக்கு சென்றாலும், கருடனின் அனுமதியோடுதான் பெருமாளை சந்திக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இந்த மாதம் மார்கழி மாதத்தில் இயற்கையாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் வாசல் திறந்து இருக்கும் என்பது ஐதீகம். அது போல விஜயகாந்த் வைகுண்ட பதவிக்கு போகிறார் என்பதை, வட்டமிட்டு கருட பகவானே உறுதிப்படுத்துகிறார். அதை நாம் கண்கூடாக பார்த்தோம்.

விஜயகாந்தின் புண்ணிய ஆன்மா: அப்படி தியான தர்மம் அதிகமாக சேர்ந்த புண்ணிய ஆத்மா தான் விஜயகாந்த். இந்த வாழ்வியலில், இந்த கலிகாலத்தில் இந்த மாதிரி நிகழ்வு நடந்தது மிகவும் அறிது. கடவுள் ஜோதிடம் குறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட அது கண்ணுக்கு முன்னாடி இந்த பிரபஞ்சம் வெளிப்படுத்தும், அதன் வெளிப்பாடுதான், மார்கழி மாதத்தில் சொர்க்க வாசலுக்கு விஜயகாந்தின் புண்ணிய ஆன்மா செல்வதற்கு வரவேற்பு நிகழ்வு தான் இந்த கருடன் வட்டமிட்டது என்று பிரபல ஜோதிடர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X