Vaadivaasal: வெற்றிமாறனிடம் மல்லுக்கட்டும் சூர்யா.. வாடிவாசல் படம் தாமதத்திற்கு காரணம் இதுதானா?

சென்னை: நடிகர் சூர்யாவிற்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம் தோல்வி படமாக அமைந்ததை அடுத்து, அனைவரும் தற்போது வாடிவாசல் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் தாமதமாகி வருவதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். படத்தின் தாமதத்திற்கு என்ன காரணம் என்கிற தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சூர்யாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கங்குவா, 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் முதல் நாள் அன்றே மக்களிடம் இருந்து கடுமையான நெகட்டிவ் விமர்சனம் வந்ததால், பெரிதாக தியேட்டரில் ஒடாமல் போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Vaadivaasal Vetrimaaran suriya

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: ரெட்ரோ திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யா, காதல் மற்றும் எமோஷன் கலந்த டச்சிங்கான ஹீரோவாக மட்டுமில்லாமல், ஒரு கேங்ஸ்டராகவும் மிரட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா என்ற எதிர்பார்க்காத காம்போவில் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய ஹைப் இருந்து வருகின்றது.

Vaadivaasal Vetrimaaran suriya

வாடிவாசல் ஏன் தாமதம்: இந்த படத்தை தொடர்ந்து வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பாப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. அதற்கு காரணம் வெற்றிமாறனிடம் 'வாடிவாசல்' படத்திற்கான 'பவுண்டட் ஸ்கிரிப்ட்' தயாராகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை அதை வெற்றிமாறன் தயார் செய்து தரவில்லையாம். நடிகர் சூர்யாவோ 'பவுண்டட் ஸ்கிரிப்ட்'டை கேட்டிருக்கிறாராம்.அது வந்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்பதில் சூர்யா உறுதியாக இருப்பதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

Vaadivaasal Vetrimaaran suriya

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த வணங்கான் படத்தின் 'பவுண்டட் ஸ்கிரிப்ட்' வேண்டும் என்று சூர்யா கேட்டுள்ளார். அப்படி பாலா தராததால் தான் பிரச்சனை ஏற்பட்டு அப்படமே டிராப் ஆனது. பின்னர், அந்த படத்தை அருண் விஜய்யை வைத்து எடுத்து முடித்தார். வணங்கான் படத்திற்கு வந்த பிரச்சனை போலவே வாடிவாசல் படத்திற்கும் இப்படி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X