twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்கள் குறித்து பாசிட்டிவாக சிந்தித்த தூரிகை..ஏன் இந்த திடீர் முடிவு?

    |

    சென்னை : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து மண்ணின் முக்கியத்துவத்தை கவிதை நடையில் பேசியிருந்தார்.

    பாய்ஸ், கில்லி, பேரழகன், அந்நியன், சந்திரமுகி, போக்கிரி, வேட்டைக்காரன், சுறா, காவலன், கோ, வெடி, ஏழாம் அறிவு, அட்டகத்தி, மரியான், மெட்ராஸ், ஐ, திரிஷா இல்லனா நயன்தாரா, கபாலி போன்ற பலபடங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார்.

    பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் அடிக்கும்..டிரைலரை பார்த்து பாராட்டிய சூர்யா!பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் அடிக்கும்..டிரைலரை பார்த்து பாராட்டிய சூர்யா!

    தூரிகை கபிலன்

    தூரிகை கபிலன்

    இந்நிலையில், கவிஞர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சற்று முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை., தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    பெண்ணாக பிறந்தது பெருமை

    பெண்ணாக பிறந்தது பெருமை

    கபிலனின் மகள் தூரிகை, 2020ம் ஆண்டு ''பீயிங் வுமன்" எனும் இதழைத் தொடங்கினார். அந்த விழாவில் பா ரஞ்சித், இயக்குநர் கலந்து கொண்ட நிலையில், அந்த விழாவில் பேசிய துரிகை, நான் பெண்ணாக பிறந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அதற்காகத்தான் ''பீயிங் வுமன்" என்ற பத்திரிக்கையை தொடங்கினேன்.இந்த பத்திரிக்க பெண்ணியம் பற்றிப் பேசுவதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறைப் பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல. பெண்கள் குறித்த அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகை.

    பெண் முன்னேறி வருகிறார்கள்

    பெண் முன்னேறி வருகிறார்கள்

    பெண்கள் அனைத்து துறைகளில் சாதனை படைத்து முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் எந்தத் துறையில் சாதனை புரிந்தார்கள், அவர்களுடைய திறமைகள் என்னென்ன, ஒரு பெண் மீது ஈர்ப்பு இருக்க காரணம் என்ன. என்பது போன்ற முழுக்க முழுக்க பெண்களின் நேர்மறைகளைப் பற்றி மட்டுமே இந்த பத்திரிகையில் எழுத போகிறேன். சுருக்கமாக சொல்லப்போனால், பெண்களைக் கொண்டாடுவதற்குத் தான் இந்த பத்திரிகை என்று பெண்மையை வெகுவாக புகழ்ந்து பேசியிருந்தார்.

    ஏன் இந்த திடீர் முடிவு

    இப்படி பெண்கள் குறித்து ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு கபிஞரின் மகள் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. தற்கொலை என்பது ஒரு நொடிப்பொழுதில் ஒருபுத்திசாலி எடுக்கும் முட்டாள் தனமாக முடிவாகும். இந்த எண்ணம் மனதிற்குள் லேசாக எழும் போதே அதற்கு சமாதி கட்டிவிடுங்கள்.

    English summary
    lyricist kabilan daughter thoorigai kabilan commits suicide at her residence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X