Chitra Father: சித்ரா தந்தை தற்கொலை.. என் வீடே சுடுகாடா போச்சே.. கதறி அழுத தாய்!

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் நான்கு ஆண்டுக்கு முன் இதே டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் தந்தை காமராஜ், சித்ரா இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரின் மறைவு அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான சித்ரா, தனது திறமையால் படிப்படியாக முன்னேறி பல சீரியல்களில் லீட்ரோலில் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சித்ரா. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

vj chitra father death

சித்ரா மறைவு: இதுதொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது. அவரின் விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களை மகளிர் நீதிமன்றம் முறையாக கவனத்தில் கொள்ளாமல் ஹேம்நாத்தை விடுதலை செய்துவிட்டது என்றும், எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவரது தந்தையும் தற்கொலை இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் ரூமில் : இதுகுறித்து சித்ராவின் அம்மா கதறி அழுத படி பேசி உள்ளார். அதில், காலையில் நாலு மணிக்கு நான் பார்க்கும்போது கூட அவரு உக்காந்து தான் இருந்தாரு, பின் ஆறு மணிக்கு வந்துபார்த்தேன் ரூம்ல இல்லாததால், சித்ரா ரூமுக்கு போய் பார்த்தேன். சித்ரா இருந்த ரூமிலேயே அவரும், அவரோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரு. என் வீடு சுடுகாடா ஆகிப்போச்சு, என்னுடைய பொண்ணையும் சாகடித்துவிட்டான், இப்ப என்னுடைய கணவரையும் சாகடித்துவிட்டான் அவன் நல்லா இருப்பானா. இன்னும் யார் யாரை சாக அடிக்க போறான்னு தெரியலையே.

குடும்பமே நாசமா போச்சு: சந்தோசமா இருந்த குடும்பத்துக்குள்ள எந்த நேரத்தில் வந்தான் என்று தெரியல என் குடும்பமே நாசமா போச்சு. அவன் என்னைக்கு விடுதலையாகி வெளியில வந்தானோ அப்போதுல இருந்தே என் வீட்டுக்கார் சாப்பிடாம மனசால நொந்து போய்ட்டார். நான் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவரால் அதை ஏத்துக்கவே முடியல, கடைசில இப்படி ஒரு முடிவை எடுத்து என்ன இப்படி அனாதையா ஆக்கிவிட்டாரே. என் பொண்ணு சித்ரா இந்த வீட்டுக்கு ஆம்பள மாதிரி இருந்து எல்லாத்தையும் செஞ்சா, அவளும் போயிட்டா கடைசில இப்ப என் வீட்டுக்காரரும் போயிட்டாரு, இப்போ யாருமே இல்லாம கடைசில நான் அனாதையா இருக்கேன் என்று கதிறி அழுதார். அவரின் அந்த கதறல் கல் நெஞ்சையும் கறைய வைத்தது. உதவி ஆய்வாளராக இருந்த சித்ராவின் தந்தை காமராஜ் 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X