போர் தொழில் படத்தை பாராட்ட ப்ளூ சட்டை மாறன் காசு வாங்கினாரா? சர்ச்சையை கிளப்பிய பயில்வான்!

சென்னை : போர் தொழில் படத்தை புகழ்ந்து பேச ப்ளு சட்டை மாறன் காசு வாங்கினாரா என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போர் தொழில்.

இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கிரைம் திரில்லர் படம் இது என்றும், ராட்சசன் படத்துக்கு நிகராக இப்படம் இருக்கும் என்றும் படம் பார்த்தவர்கள் புகழ்ந்தனர்.

What is the reason to appreciate the film Blue Sattai Maran Por thozhil, asked Bayilvan Ranganathan

பாராட்டிய ப்ளூ சட்டை மாறன் : இப்படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை மிஸ் பண்ணாம தியேட்டர்ல பாருங்க என கூறியிருந்தார். ப்ளூ சட்டை மாறனே பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் இப்படத்துல அப்படி என்னதான் இருக்கு என்பதை காண ரசிகர்களும் படத்தை பார்க்க ஆர்வமானார்கள்.

படம் சுமார் : இந்நிலையில் சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா படத்தையும் கிழி கிழி என்று கிழிக்கும் ப்ளூ சட்டை மாறன், அண்மையில் வெளியான போர் தொழில் படத்தை பாராட்டி உள்ளார். நானும் அந்த படத்தை பார்த்தேன் நான் எப்போதும் படத்தை விமர்சனம் செய்யும் போது சாதாரண மனிதன் எப்படி படத்தைப் பார்த்து விமர்சிப்பாரோ அப்படித்தான் விமர்சனம் செய்வேன். அப்படித்தான் போர் தொழில் படத்தை பார்த்துவிட்டு இடைவேளைக்கும் முன் சூப்பர் இடைவேளைக்குப்பின் போரோ போர் என்று கூறியிருந்தேன்.

What is the reason to appreciate the film Blue Sattai Maran Por thozhil, asked Bayilvan Ranganathan

புதுசா ஒன்னும் இல்லை : முதலில் இந்த படத்தின் இயக்குநருக்கு பெயர் வைப்பதிலேயே பிரச்சனை இந்த படத்திற்கு போர் தொழில் என்று பெயர் வைத்துள்ளார். இதற்கு அர்த்தம் என்ன என்பது அவருக்குத்தான் தெரியும். அதே போல, பாடி டிமாண்டிங் கொண்ட பெண் கணவரால் திருப்தி அடையாமல், அவரின் கண்முன்னே வேறு ஒரு ஆணுடன் உறவுவைத்துக்கொள்கிறார். இதனால், அந்த கணவன் பெண்கள் மீது கோவமடைந்து தொடர் கொலைகளை செய்கிறார். இதே போன்று பல த்ரில்லர் கதைகளை நாம் பல படங்களில் பார்த்து இருக்கிறோம் இதில் புதுசா ஒன்னும் இல்லை என்பது தன் என் விமர்சனம்.

காசு வாங்கினாரா : போர் தொழில் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் 20 டிக்கெட் கூட விற்பனையாகவில்லை என்பது தான் உண்மை. ஆனால், அனைத்துப் படங்களையும் கிழி கிழி என்று கிழிக்கும் ப்ளூ சட்டை மாறன் போர் தொழில் படத்தை ஆஹா ஓஹோ என்றும் ஹாலிவுட் படத்தை பார்ப்பது போல படம் இருக்கு என புகழ்வதற்கு என்ன காரணம். ப்ளூ சட்டை மாறன் கையுட்டு எதுவும் பெற்றாரா இல்லை, விளம்பரத்தில் பெரும் தொகை எதுவும் பெறப்பட்டதா என பயில்வான் ரங்கநாதன் ப்ளூ சட்டை மாறனை வெச்சி செய்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X