பல கோடிக்கு ஓடிடி பிசினஸ் ஆன நயன்தாராவின் நெற்றிக்கண்... ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : நடிகை நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள திரில்லர் திரைப்படம் நெற்றிக்கண்.

கொரிய மொழியில் வெளியான ப்ளைண்டர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடிக்கு பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அதன் ரிலீஸ் தேதியும் தற்போது கசிந்துள்ளது.

படப்பிடிப்பு தடைபட்டது

படப்பிடிப்பு தடைபட்டது

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவித்து வரும் நடிகை நயன்தாரா அடுத்து அவள் பட இயக்குனர் மிலிந்த் ராய் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடித்து உள்ளார். கொரோனா பரவலுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் முதல் அலையில் போடப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது.

நடிகர் அஜ்மல்

நடிகர் அஜ்மல்

ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இப்பொழுது மொத்த பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் அஜ்மல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி

பார்வையற்ற மாற்றுத்திறனாளி

கொரிய மொழியில் வெளியான ப்ளைண்டர் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. த்ரில்லருக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் விருவிருப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையைக் கிளப்பியது. நயன்தாரா இதில் முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார்.

20 கோடி ரூபாய்க்கு டீல்

20 கோடி ரூபாய்க்கு டீல்

திரையரங்குகளில் நெற்றிக்கண் வெளியாகும் என ஆவலுடன் பலரும் காத்துக் கொண்டிருக்க கொரோனா இரண்டாவது அலை காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு பேசி முடிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

அதிக லாபத்தை

அதிக லாபத்தை

மேலும் ஜூலை 9-ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. நயன்தாராவின் சம்பளத்தை தவிர்த்து வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ஓடிடி ரைட்ஸ் மட்டும் 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது . நயன்தாராவின் திரைப்படங்களிலேயே அதிக லாபத்தை கொட்டிக்கொடுத்த படம் இதுவே என கோலிவுட் வட்டாரங்களில் இந்த தகவல் தீயாய் பரவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X