விக்ரமில் கமலின் வேடம் இதுவா? .... இணையத்தில் கசிந்த தகவல் !
சென்னை : விக்ரம் திரைப்படத்தின் கமலின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்த சட்டமன்ற தேர்தலில் கமல் பிசியானா. அடுத்ததாக கொரோனா 2வது அலை தீவிரமானதால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பிக் சீசன் 5, உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டு இருந்த நிலையில், ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்ததற்கான அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் கமலின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில், விஜய்சேதுபதியும் பஹத் பாசிலும் அண்ணன் தம்பி, அரசியல்வாதிகளாகவும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்ட நரேனை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. கமல் இதில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார் கமல். கைதி திரைப்படம் போலவே இதுவும் ஒரே இரவில் நடக்கும் கதை என்றும் சொல்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என அடுத்தடுத்து அப்டேட் குறித்து ரசிகர்கள் இப்போதே கேட்கத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











