தங்கலான் படத்தின் உண்மைக் கதை… தலைப்பில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன?
சென்னை : இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டு வருகிறது.

பான் இந்திய திரைப்படமான வெளியாக உள்ள இப்படத்திற்கு தங்கலான் என தலைப்பு வைத்தற்கு என்ன காரணம், தங்கலான் பெயரில் மறைந்து இருக்கும் ரகசியம் என்ன என்று பார்க்கலாம்.
விக்ரம்,பா.ரஞ்சித் கூட்டணி : தமிழ் சினிமாவைத்தாண்டி இந்திய சினிமா எதிர் பார்த்துக்கொண்டு இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் மீதான கூடுதல் ஹப்புக்கு காரணம் விக்ரமும் ரஞ்சித்தும் கூட்டணி அமைந்துள்ளது தான். ரஞ்சித் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் தங்கலான் திரைப்படமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும்.

தங்கலான் வார்த்தை இல்லை உணர்ச்சி : தங்கலான் என இப்படத்திற்கு பா. ரஞ்சித் பெயரை ஏதோ மொத்தம் போதுவாக வைத்துவிடவில்லை. தங்கலான் என்பது ஒரு வார்த்தை மட்டுமில்லை அது உணர்ச்சிப்பூர்வமானது. இந்த வார்த்தையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அதற்காக ஒரு வரலாற்றையே படிக்க வேண்டும். 1881ம் ஆண்டு பிரிட்டிஸ் இந்தியா வெளியிட்ட புத்தகத்தில் தான் தங்கலான் பெயரின் ரகசியமே மறைந்துள்ளது.மக்களின் பாதுகாவலன் : அந்த புத்தகத்தின் பெயர் சென்சஸ் ஆப் பிரிட்டிஷ் இந்தியா. இதில் 84 பறையர் இன உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் பேசும் பறையர் இன குழுக்குகளில் 59வது பிரிவாக 'தங்கலால பறையன்' என இடம் பெற்றுள்ளது. இதில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்புத்தான் தங்கலான். பேச்சுவழக்கில் தங்கலான் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அது ஒடுக்கப்பட்டோர் இனத்தலைவன், ஊர்காவலன், எல்லை வீரன், மக்களின் பாதுகாவலன் என பலவற்றை குறிக்கிறது.

நில அரசியல் : இதில், தங்கம் கிடைக்கும் இடம் ஒடுக்கப்பட்ட மக்களின் வசம் இருக்கிறது. இதை அபகரிக்க அதிகாரவர்க்கம் முயற்சி செய்கிறது. இதை ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி சமாளித்து எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் தங்கலான் படத்தின் கதை. பா ரஞ்சித்தின் படங்கள் பெரும்பாலும் நில அரசியலை பேசும் படமாக இருக்கும். ஏன் என்றால், ஒரு இனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிலம் எவ்வளவு முக்கியம் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் பா ரஞ்சித் தெளிவாக விளக்கி வருகிறார். அதேபோல தங்கலான் திரைப்படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலம் சார்ந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகர்கள் : இதில், படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் மையக்கரு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் அமைந்துள்ளதை போல உள்ளது. இப்படத்தை படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











