Rajini: 74 வயதிலும் பாக்ஸ் ஆபிசில் அடித்து தூக்கும் சூப்பர் ஸ்டார்.. ரஜினியின் தாரக மந்திரம் என்ன?
சென்னை: இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுமார் ஐம்பது ஆண்டுகளாக வெள்ளித்திரையில் ஆட்சி செய்து வரும் இவர், எண்ணற்ற வெற்றிப் படங்களையும், தன் நிகரில்ல ரசிகர் பட்டாளத்தையும் கொண்டு பல ஆண்டுகளாக வசூல் மன்னாக இருக்கிறார். 74 வயதிலும் எந்தவிதமான சோர்வும் இல்லாமல் தினமும் உடற்பயிற்சி, தியானம், நல்ல உணவு முறை போன்றவற்றை செய்து, வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தேவா என்கிற ரோலில் நடித்த திரைப்படம் தான் கூலி. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கூலி திரைப்படம் முதல் நாளில் 152 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் சாதனையை படம் படைத்து இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது. கடந்த 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. படம் ஆயிரம் கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறைவு தான் என்றாலும், 74 வயதில் ரஜினிகாந்த் வசூல் மன்னாக இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: அண்மையில்,ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், ரஜினி பெஞ்சின் உதவியுடன் ஸ்கிவாட்ஸ் செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் அவரின் மன உறுதியை வெகுவாக பாராட்டினார்கள். உடற்பயிற்சி ரஜினி எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே போல, ரஜினிகாந்த் மன வலிமைக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறார். யோகா, மூச்சுப் பயிற்சியை தினமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக செய்து வருகிறார். தெலுங்கு மீடியாவிற்கு அவர் அளித்த பேட்டியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, யோகா பயிற்சி செய்து வருவாகவும், அது தனக்கு ஆற்றல், கவனம் மற்றும் மன அமைதியை அளிப்பதாக கூறியிருந்தார். அவர் தினமும் கடைபிடித்து வரும் இந்த ஒழுக்கம் தான், நட்சத்திர அந்தஸ்தின் அழுத்தங்கள் இருந்தபோதிலும் அவர் மனது சமநிலையுடன் இருக்க உதவுகிறது.
வெற்றியின் ரகசியம் : 2014ம் ஆண்டுக்கு பிறகு, சில உடல் நல குறைபாடு காரணமாக அசைவ உணவை முற்றிலும் தவிர்த்துவிட்டு, சைவ உணவு முறைக்கு மாறினார். அந்த உணவும் வீட்டில் சமைத்த எளிமையாக உணவு தான், மேலும், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நட்ஸ்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, துரித உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பால் பொருட்களை அவர் தொடுவதே இல்லை. இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக இருப்பதன் ரகசியம் இமயமலைக்கு செல்வதுதான். ஒவ்வொரு படத்தையும் முடித்த பிறகு, தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ள, இமயமலைக்கு சென்றுவிடுகிறார். அங்கு இயற்கையின் மடியில் அமைதியையும் வலிமையையும் காண்கிறார். இந்த பயணங்கள் உடல் ஓய்வுக்காக மட்டுமல்ல, ஆன்மீக குணப்படுத்துதலுக்காகவும் உதவுகிறது. இது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்றளவும் சோர்வடைய செய்யாமல் வைத்து இருக்கும் தாரக மந்திரம்.


Click it and Unblock the Notifications











