என்னது பாக்கெட் சைஸ் ஏலியனா!? அயலான் படம் குறித்து கசிந்த தகவல்!
சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள படம் அயலான்.
கருணாகரன், யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹிட் அடித்த பாடல்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் வெளிவரவுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. படக்குழுவினர் டீசர்/ட்ரைலர் ஏதும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் செல்லம்மா, நெஞ்சமே,
ஓ பேபி என படத்தின் மூன்று பாடல்களும் வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு
இதையடுத்து சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் சிபி இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிலுவையில் இருந்த நிலையில் கூடிய விரைவில் தொடங்கவுள்ளது.

கால தாமதம்
இந்நிலையில் முன்னரே அயலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் அண்மையில் டப்பிங் வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது. இது
சயின்ஸ் பிக்சன் படமாக இருப்பதால் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க கால தாமதம் ஆகி வருகிறது என தகவல்கள் வந்தன.

ஆர்வத்துடன் ரசிகர்கள்
தற்போது இந்த படத்தின் கதை குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மினரல் வாட்டர் சப்ளை ஏஜென்ட் எனவும், பாக்கெட் சைஸ் ஏலியனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் நகைச்சுவை கலந்த கதை தான் அயலான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











