'குரு' சங்கரையே மிஞ்சிடுவார் போலயே.. பிகில் படத்தின் பட்ஜெட் இவ்வளவா! ஆச்சர்யப்பட வைத்த அட்லீ!
பிகில் படத்தில் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். அவர் ''நண்பன்'' படத்திலும் பணியாற்றினார்.
இதில் அவருக்கு விஜய் உடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன் மூலம் விஜய் உடன் அட்லீ இணைந்து தெறி, மெர்சல் என்று இரண்டு பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தார்.

எப்படி படம்
இந்த நிலையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

திரில்லர் கதை
திரில்லர் ஸ்ப்போர்ட்ஸ் ஜானரில், படம் நிறைய டிவிஸ்ட் மற்றும் செண்டிமெண்ட் உடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். அதேபோல் நயன்தாரா, இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

எவ்வளவு செலவு
இந்த நிலையில் இந்த படத்திற்கு மொத்தமாக 180 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. படத்தின் பட்ஜெட் 170 கோடி என்று திட்டமிடப்பட்டு, பின் 180 கோடியில் முடிந்துள்ளது. அதனால் படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இவ்வளவு
இந்த படத்தில் நிறைய மாஸ் சண்டை காட்சிகள் இருக்கிறது. அதேபோல் கால்பந்து போட்டிக்காக இதில் உண்மையாக ஒரு மைதானத்தையே செட் போட்டுள்ளனர். அதேபோல் பாடல் காட்சிகளுக்கும் பிரம்மாண்டமாக செட் போட்டு உள்ளனர்.

இதுதான் காரணம்
இதுதான் படத்தின் பட்ஜெட் எகிற காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் படம் முதல் நாளே வசூல் மூலம் இதை சரி செய்துவிடும். வியாபாரம் மற்றும் வசூல் 100 கோடியை தொட்டுவிடும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











