சந்திரமுகி 2 படத்தின் வசூல் இவ்வளவு தானா? என்ன பித்தலாட்ட வேலை இது!
சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, நன்றாக கல்லாக்கட்டியது. இந்த படத்தில் ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு, வினீத், மாளவிகா என பலர் நடித்திருந்தனர்.
சந்திரமுகி இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 28ந் தேதி வெளியானது.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2: சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். அதே வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜா இந்த பாகத்திலும் முக்கிய பங்காற்றி உள்ளது. முதல் பாகம் சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தில், ஆத்மா, பேய், தெய்வசக்தி, பேய்க்கும் பேய்க்கும் சண்டை என கதையை மாற்றி அமைத்திருந்தார்.
ரஜினியின் வாடை: படத்தின் அறிமுகக் காட்சி தொடங்கி படம் முடியும் வரை ராகவா லாரன்ஸின் ஒவ்வொரு அசைவிலும் ரஜினியின் வாடை அப்படியே வீசியது. கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ராகவா லாரன்ஸை விட இவருக்குதான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ட்ரோல் செய்த ரசிகர்கள்: சந்திரமுகி 2 என படத்திற்கு பெயர் வைத்து விட்டு, சந்திரமுகி படத்தில் வந்த காட்சியை அப்படியே வேறு நடிகர்களை வைத்து எடுத்து இருக்கிறார் இயக்குநர் என ரசிகர்கள் படத்தை கடுமையாக ட்ரோல் செய்தனர். படம் வெளியான முதல் நாள் 7.5 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூலித்தது. அதன் பிறகு படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் படம் எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை.

பொய்யான தகவல்: ஆனால் படத்தின் நாயகியான கங்கனா ரணாவத், சந்திரமுகி 2 படம் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகா எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், சந்திரமுகி 2 படம் மகத்தான வசூலை அள்ளி வருகிறது என சொல்லப்படுகிறது.
என்ன பித்தலாட்டம்: ஆனால், மற்ற முன்னணி சினிமா வலைதளங்களில், சந்திரமுகி 2 படம் செம மொக்கை என்றும், இப்படம் வெறும் 17 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறி உள்ளதால், ரசிகர்கள் உண்மையான வசூல் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனத்தால், படத்தின் மீதான ஹைப்பை அதிகரிக்கவே படக்குழு இதுபோன்ற பித்தலாட்ட வேலையில் ஈடுபட்டுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படத்தின் உண்மையான வசூல் என்ன என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டால், உண்மை என்ன என்பது தெரியும்.


Click it and Unblock the Notifications