3 டிவிட்...3 பாலோயிங்.. 12,000 பாலோயர்ஸ்.. இவ்ளோதாங்க வடிவேலுவின் டிவிட்டர் சொத்து!
சென்னை: டிவிட்டரில் புகுந்துள்ள இம்சை அரசன் வடிவேலுவின் ட்விட்டர் பக்கத்திற்குப் போய்ப் பார்த்தால் மதுரைக்காரர் நிறைய மெசேஜ் போடாமல் வைத்துள்ளதைக் காண முடிந்தது.
இவர்தான் மெசேஜ் நிறையப் போடவில்லையே தவிர இவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை வெறித்தனமாக வேகம் வேகமாக கூடிக் கொண்டே இருப்பதைக் காண முடிந்தது.
இதுவரை 3 டிவிட்களை மட்டுமே போட்டு வைத்துள்ளார் வைகைப் புயல். வாங்க வடிவேலுவின் டிவிட்டர் வீட்டுக்குப் போய்ட்டு வருவோம்.

3 டிவிட்கள்
மொத்தம் 3 டிவிட்களைப் போட்டு வைத்துள்ளார் வடிவேலு.

வருகையின் வீடியோ
முதலில் தனது வருகையை அறிவிக்கும் வீடியோ இணைப்பை கோர்த்து விட்டுள்ளார்.

வந்துட்டேன்யா வந்துட்டேன்யா
அடுத்த டிவிட், வந்துட்டேன்யா வந்துட்டேன்யா என்ற அவரது சந்தோஷக் குரலாக இருக்கிறது.

என்னயா இது இவ்வளவு வேகமா பரவுது!
அடுத்து இன்னொரு டிவிட். அதில் என்னயா இது இவ்வளவு வேகமா பரவுது! என்று தன்னைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார் வடிவேலு.

பின்பற்றுவோர் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு
கிட்டத்தட்ட 12,000 பேர் வடிவேலுவின் டிவிட் பக்கத்தைத் தொடர்கிறார்கள். அவர் மூன்று பேரை பாலோ செய்கிறார்.

இன்னும் நிறைய..
தற்போது வடிவேலு பிசியாக இருப்பதால் உடனுக்குடன் எதையும் டிவிட் பண்ண முடியவில்லை என்று தெரிகிறது. கூடிய விரைவில், கூடுமான வரையில் தனது ரசிகர்களுடன் நிறையப் பேச முயற்சிப்பார் வடிவேலு என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











