For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது வனிதா விஜயக்குமார் கர்ப்பமா...பகீர் கிளப்பிய ரசிகர்கள்...அவரே சொன்ன விளக்கம் இதோ

  |

  சென்னை : நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார், விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்து தனது கெரியரை தொடங்கினார். மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து, பின்பு திருமண வாழ்க்கையில் பிஸியானார்.

  Recommended Video

  Vanitha Vijaykumar கர்ப்பமா இருக்காங்களா? பகீர் கிளப்பிய ரசிகர்கள்... *TV | Filmibeat Tamil

  சினிமாவை விட்டு முழுவதுமாக விலகிய வனிதாவிற்கும், அவரது முதல் கணவருக்கும் விவாகரத்து ஆனது. பின்பு இரண்டாவதாக தொழிலதிபர் ஒருவரை வனிதா திருமணம் செய்தார். ஆனால் அவருடனும் விவாகரத்து நடக்க பின்பு பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவரை வனிதா காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

  இப்படி இருக்கையில் வனிதாவுக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் 3வது திருமணம் நடைபெற்றது. ஆனால் அதுவும் சில மாதங்கள் வரை மட்டுமே நீடித்தது. இப்போது பீட்டர் பாலும் வனிதாவும் பிரிந்து விட்டனர். இப்படி வனிதாவுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

  பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி! பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி!

  வனிதா செம பிஸி

  வனிதா செம பிஸி

  அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தவர், அடுத்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் அல்டிமேட் என கலக்கினார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர தனியாக ஃபேஷன் பொடிக் நடத்தி வருகிறார். அதே போல் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

  சர்ச்சைக்கும் பஞ்சமில்லை

  சர்ச்சைக்கும் பஞ்சமில்லை

  பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்தும் பாதியில் வெளியேறி கூடுதல் பரபரப்பை கிளப்பினார் வனிதா. இவர் சினிமாவிற்கு திரும்பியதற்காக எடுக்கப்பட்ட போட்டோக்களும், அதற்கு வனிதாவின் ரியாக்ஷன்சும் கூட பரபரப்பை கிளப்பின. பல சர்ச்சைகளுக்கு இடையே வனிதா இப்போது ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார்.

  வனிதா விஜயக்குமார் கர்ப்பமா

  வனிதா விஜயக்குமார் கர்ப்பமா

  சினிமாவில் லீட் ரோலிலும், துணை நடிகை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் வனிதா. இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் செம வைரலானது. வனிதா கர்ப்பமாக இருப்பது பற்றி நெட்டிசன்கள் பல விதங்களில் கமெண்ட் பதிவிட துவங்கி விட்டனர்.

  வனிதா சொன்ன விளக்கம்

  வனிதா சொன்ன விளக்கம்

  இது குறித்து ரசிகர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த போட்டோவிற்கு வனிதாவே விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, வனிதா 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவர் நிறைமாத கர்ப்பிணியாக பல்லவி என்ற ரோலில் நடிக்கிறார்.இதை அவரே பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகின என்பது இப்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

  கவனத்தை ஈர்த்த போஸ்டர்

  கவனத்தை ஈர்த்த போஸ்டர்

  மலையாளத்தில் வெளியாகி செம ஹிட்டான ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள் என்ற படத்தில் தமிழ் ரீமேக் தான் வாசுவின் கர்ப்பிணிகள். இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் நீயா நானா கோபிநாத்தின் பின்னால் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயக்குமார், சீதா, லீனா ஆகிய நான்கு பெண்கள் கர்ப்பமாக இருப்பது போல் இடம்பெற்றிருந்தது.

  இது தான் விஷயமா

  இது தான் விஷயமா

  மணி நாகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டரில் தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோவை மட்டும் எடுத்து, தனது கேரக்டர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் வனிதா. ஆனால் அதை கவனிக்காமல், வனிதா கர்ப்பமாக இருப்பதை மட்டும் பார்த்து விட்டு, நெட்டிசன்கள் பகீர் கிளப்பி, சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கி விட்டனர்.

  English summary
  Vanitha Vijayakumar playing a pregnant woman role in Vasivin Karpinigal movie. She posted her photo in instagram and revealed her character name. But netizens questioned that is Vanitha was pregnant. Now she explained the truth behind the photo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X