»   »  அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டுப்புகள் என்ன?: கசிந்த தகவல்

அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டுப்புகள் என்ன?: கசிந்த தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டப் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி படத்தை அடுத்து விஜய், இயக்குனர் அட்லீ மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஜய் 61 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று ஹீரோயின்கள்.

What is Vijay's getup in Atlee's movie?

விஜய்யை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடிக்கிறார். படத்தில் விஜய் அப்பா மற்றும் 2 மகன்களாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. விஜய் தாடி, மீசையுடன் இருப்பது மட்டும் தான் தெரிந்தது.

இந்நிலையில் அவரின் கெட்டப்புகள் குறித்து தெரிய வந்துள்ளது. அப்பா மற்றும் ஒரு மகன் விஜய் கிராமத்து ஆட்களாகவும், மற்றொரு மகனான விஜய் மாடர்னாகவும் வருவார்களாம்.

படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. படத்திற்கு மூன்று முகம் என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Vijay's getups in his upcoming movie being directed by Atlee is revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil