இந்த சுச்சிக்கு என்னாச்சு.. பத்திக்கிட்டு வருதாமே.. பிக்பாஸை பார்த்து கடுப்பான பிரபல நடிகை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுச்சி, பாலாஜிக்கு ஆதரவாய் பொங்குவதை பார்த்து பிரபல நடிகை விளாசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்தே பார்த்து வருபவர் நடிகை ஸ்ரீபிரியா. கடந்த 3 சீசன்களையும் பார்த்து அதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீபிரியா, இந்த சீசனையும் ஃபாலோ பண்ணி வருகிறார்.

ஒவ்வொரு எபிசோடையும் பார்த்து விட்டு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து வருகிறார் ஸ்ரீ பிரியா. ஒரு நாள் அவருடைய கமெண்ட் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் ஏங்கி விடுகின்றனர்.

விளாசிவிடும் ஸ்ரீபிரியா

விளாசிவிடும் ஸ்ரீபிரியா

அந்தளவுக்கு ஒன்றி போய்விட்டார். பிக்பாஸில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் பளீச்சென சொல்லி விடுவார். சரியாக இருப்பவர்களை பாராட்ட தவறுவதில்லை. அதேபோல் தவறு செய்பவர்களையும் விளாசி விடுகிறார்.

பாலாவுக்கு ஆதரவு

பாலாவுக்கு ஆதரவு

இந்நிலையில் நேற்றைய எபிசோடை பார்த்து டிவிட்டிள்ளார். குறிப்பாக சுச்சியை விளாசியுள்ளார் ஸ்ரீபிரியா. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே சுச்சி பாலாவுக்கு ஆதரவாய் இருந்து வருகிறார்.

ஏத்திவிட்ட சுச்சி

ஏத்திவிட்ட சுச்சி

நேற்றைய எபிசோடில் கேபி ஹானஸ்ட்டா பதில் சொல்லு என்று பாலாஜியிடம் கேட்டதை, ஷிவானியும் சுச்சியும் சேர்ந்து மேலும் மேலும் ஏற்றிவிட்டனர். இதனால் கடுப்பான பாலாஜி, ஆவேசமாக அனைவரையும் கத்திவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்திக்கிட்டு வருது..

பத்திக்கிட்டு வருது..

தொடர்ந்து பாலாஜியுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்த சுச்சி, நீங்கள் விளையாடும்போதுதான் ஹானஸ்ட் என்ற கேள்வி வருகிறது என டென்ஷன் ஆனார். தொடர்ந்து உங்களை தவறாக சொல்லும் போது எனக்கு பத்திக்கிட்டு வராதா என்று கேட்டு ஓவர் எமோஷனல் ஆனார்.

ஓவர் ரியாக்ட்

ஓவர் ரியாக்ட்

அது பார்ப்பவர்களுக்கே அசாதாரணமாக தெரிந்தது. இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் சுச்சி இப்படி ஓவராய் ரியாக்ட் செய்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். இந்நிலையில் இதுகுறித்துதான் ஸ்ரீபிரியா டிவிட்டியுள்ளார்.

வாட்ஸ் ராங் ?

வாட்ஸ் ராங் ?

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சுச்சிக்கு என்னா கெட்டுப்போச்சு என கேட்டுள்ளார். ஏதோ அசாதாரணமாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா. மேலும் ஷிவானிக்கும் சுச்சிக்கும் விரைவில் மோதல் வெடிக்கும் போல தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

ட்ரிகர் பண்ணும் சுச்சி

ட்ரிகர் பண்ணும் சுச்சி

மேலும் சுச்சி குறித்து பாலாஜியிடம் போட்டுக்கொடுத்த சம்யுக்தாவை ஸ்மார்ட் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீபிரியா. அவரது இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் கரெக்ட்டா சொன்னீங்க மேம், சுச்சிதான் பாலாவ ட்ரிகர் பண்றாங்க என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X