Kaappaan காணாமல் போன பைரவா விக் கிடைச்சிடுச்சு டோய்
சென்னை: காப்பான் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியாகியுள்ள போஸ்டரில் இருக்கும் சூர்யாவை பார்த்து தான் இப்படி பேசுகிறார்கள்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ம் தேதி சென்னையில் நடக்கும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் சூர்யாவின் தலைமுடி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்களோ காணாமல் போன பைரவா விக் கிடைத்துவிட்டது என்று கிண்டல் செய்துள்ளனர். பைரவா படத்தில் விஜய் வைத்திருந்த விக் போன்றே உள்ளது சூர்யாவின் விக்.
இது சும்மா போஸ்டருக்காகவா இல்லை பைரவாவை கலாய்த்து ஏதாவது காட்சி உள்ளதா என்று தெரியவில்லை. போஸ்டரை பார்த்த சூர்யா ரசிகர்களோ நிகழ்ச்சி எங்கு நடக்கிறது என்றே தெரிவிக்கவில்லையே என கோபப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் காப்பான் இசை வெளியீட்டு விழா திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வருகிறார் என்றால் நிகழ்ச்சி பெரிய அளவில் இருக்கும் போன்று என ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தை லைகா தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் லைகா நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
காப்பான் இசை வெளியீட்டு விழா மேடையில் சூர்யாவையும், மோகன்லாலையும் சேர்த்து பார்க்க ஆசையாக உள்ளதாக லால் ஏட்டனின் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். சூர்யாவுக்கு கேரளாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் அதிலும் குறிப்பாக ரசிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











