என்னது...பொன்னியின் செல்வனில் கமல் இருக்காரா...இது என்ன புது ட்விஸ்ட்?

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.

Recommended Video

வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

தமிழில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையுடன் பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

படம் பற்றிய ஒரு தகவலும் ரசிகர்களின் ஆர்வத்தை துண்டி வருவதால் படம் எப்போது ரிலீசாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

 போஸ்டர்கள் வெளியீடு

போஸ்டர்கள் வெளியீடு

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டரை தொடர்ந்து, முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்களை தினம் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. விக்ரமின் ஆதித்ய கரிகாலன் போஸ்டர், கார்த்தியின் வந்தியத் தேவன் போஸ்டர், ஐஸ்வர்யா ராயின் நந்தினி போஸ்டர், த்ரிஷாவின் குந்தவை போஸ்டர், ஜெயம் ரவியின் அருள்மொழி வர்மன் போஸ்டர் ஆகியன இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

 பொன்னியின் செல்வன் டீசர்

பொன்னியின் செல்வன் டீசர்

இதைத் தொடர்ந்து நேற்று சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. பொன்னியின் செல்வன் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

 இப்பவே இத்தனை மில்லியன் வ்யூசா

இப்பவே இத்தனை மில்லியன் வ்யூசா

தமிழில் சூர்யா, இந்தியில் அமிதாப் பச்சன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு என பிரபலங்கள் இந்த டீசரை வெளியிட்டனர். வெளியிடப்பட்ட 14 மணிநேரத்தில் யூட்யூப்பில் இந்த டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

டீசரே பொன்னியின் செல்வன் நாவலில் வரும் காட்சிகளை கண்முன்னே கொண்டு வருவதாக அமைந்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரம்மாண்டத்தின் உச்சமாக பொன்னியின் செல்வன் டீசர் அமைந்துள்ளதாக ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆர்., சிவாஜியால் கூட முடியாததை மணிரத்னம் சாதித்து விட்டதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பொன்னியின் செல்வனில் கமலா

பொன்னியின் செல்வனில் கமலா

இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் யாருக்கு கமல் குரல் கொடுத்துள்ளார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் கமல் இருக்கிறார் என்பதே பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குரல் மட்டும் தான் கொடுத்திருக்கிறாரா அல்லது கெஸ்ட் ரோல் ஏதாவது செய்திருக்கிறாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

இது என்ன புது தகவலா இருக்கே

இது என்ன புது தகவலா இருக்கே

இது என்ன புது தகவலா இருக்கு. இது வேற லெவல் சம்பவமா இருக்கும் போலவே. விக்ரம் படத்தில் சுர்யா கெஸ்ட் ரோல், கார்த்தி வாய்ஸ் அப்பியரன்ஸ் கொடுத்ததுக்கே 500 கோடி வசுல் வந்திருக்கு. பொன்னியின் செல்வன் ஓப்பனிங் நாளிலேயே 1000 கோடி வசுல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கமலும் இருக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும். ரசிகர்கள் இப்போதே கமல் யாருக்கு குரல் கொடுத்திருப்பார் என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X