உதயநிதி விக்ரம் படம் பார்த்துவிட்டு பாராட்டு...பதிலுக்கு கமல் என்ன சொன்னார் தெரியுமா ?

சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை சிறப்பு பிரிவியூவில் பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அதனை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டரில் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அதற்கு விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் ஹிட்

கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் ஹிட்

நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படம் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும், படம் பார்த்த அனுபவம் சூப்பராக இருந்தது என்றும் உதயநிதி தனது டவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி, ஃபஹட் பாசில், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

சூர்யாவைக் குறிப்பிடவில்லையே?

சூர்யாவைக் குறிப்பிடவில்லையே?

இதனிடையே, விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ஒரு கேமியோ ரோல் செய்திருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில், அதைப் பற்றி உதயநிதி குறிப்பிடாததால் சூர்யா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். காரணம் விக்ரம் படத்தில் சூர்யாவின் தோற்றம் என புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இந்நிலையில், உதயநிதி வெளியிட்டுள்ள ரிவியூவில் சூர்யாவைப் பற்றி குறிப்பிடாதது எப்படி என ரசிகர்கள் பின்னூட்டங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மிரட்டும் சூர்யா

மிரட்டும் சூர்யா

விக்ரம் திரைப்படத்தில் சூர்யா கேமியோ ரோல் செய்திருக்கிறார் எனக் கூறப்பட்டாலும் கூட, அவரது புகைப்படம் ஒன்று ரசிகர்களை மிரள வைக்கிறது. கண்களில் லென்ஸ் போட்டு கொடூர வில்லனைப் போன்ற தோற்றத்தில், கடத்தல் மன்னனைப் போல் சூர்யா அப்புகைப்படத்தில் தோற்றமளிக்கிறார். என்றாலும், சூர்யா நெகட்டிவ்வான கதாப்பாத்திரங்களை ஏற்க விரும்பமாட்டார் என்பதால் நிச்சயமாக அண்டர் கவர் போலீசாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்ப்பதற்கு ரத்த சரித்திரத்தில் சூர்யாவின் தோற்றம் போல் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். விக்ரம் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, ஃபஹத் பாசில் என நான்கு மிகச் சிறந்த நடிகர்கள் இப்படத்தில் நடித்திருப்பதால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

படுஜோராக விக்ரம் புரோமோ

படுஜோராக விக்ரம் புரோமோ

விக்ரம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட புரோமசன் படு ஜோராக நடந்து வருகின்றது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விக்ரம் புரோமசன் பற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. துபாயில் உள்ள புர்ஜ்கலிஃபா டவரில் விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் ஒளியேற்றப்படுவதும், கமல் அங்குள்ள ரசிகர்களுக்கு கையசைத்து வணக்கம் சொல்வது போன்ற காணொளிகள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

கமல்ஹாசன் சொன்ன நன்றி

கமல்ஹாசன் சொன்ன நன்றி

உதயநிதி கொடுத்த ட்விட்டர் பதிவுக்கு கமல்ஹாசன் மிகவும் மகிழ்ச்சியுடன் பதில் கூறி உள்ளார். "அன்புள்ள உதயநிதி தம்பி. விக்ரம் பற்றிய உங்கள் முதல் பார்வை அறிக்கைக்கு நன்றி. நீங்கள் உங்களை ஒரு ரசிகராக படத்தை பார்த்து ரசித்து விமர்சனம் செய்து உள்ளீர்கள் . உங்கள் கருத்து எனது மற்ற சகோதரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும்" என்று சொல்லி உள்ளார் . கமலஹாசன் சொன்ன இந்த பதில் பல கமல் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது .பல கமல் ரசிகர்கள் அவர் கொடுத்த இந்த ட்விட் பார்த்து மீண்டும் ரீட்விட் செய்து மகிழ்கின்றனர் .அரசியல் நிலவரங்களுக்கு அப்பால் ஒரு கலைஞனாக இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வது , ஊக்கப்படுத்துவது மிகவும் ஆரோக்யமான ஒரு விஷயம் என்று பல சினிமா ஆர்வலர்கள் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X