ஜூனியர் என்டிஆரின் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’: ராஜமெளலி டிக் பண்ணிருந்த முதல் ஹீரோ யாருன்னு தெரியுமா?

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராஜமெளலியின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கானப்படுகிறது.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து ராஜமெளலி இயக்கிய இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில், ராஜமெளலி இயக்குநராக அறிமுகமாகிய 'ஸ்டூடண்ட் நம்பர் 1' படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹிட் இயக்குநர்

சூப்பர் ஹிட் இயக்குநர்

தெலுங்கில் பொதுவாக கமர்சியல் படங்களே அதிகமாக வெளியாகும் என்பது ரசிகர்களின் கருத்து. அப்படி கமர்சியல் படங்களிலும் தரமான மேஜிக் செய்ய முடியும் என நிரூபித்தவர் இயக்குநர் ராஜமெளலி. 'மகதீரா', 'நான் ஈ', 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' என தொடர்ந்து பிரமாண்ட ஹிட்களை கொடுத்து தமிழ் ரசிகர்களை அசரடித்துள்ளார் ராஜமெளலி. ஆனால், அவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தான் என்பது, தமிழ் ரசிகர்கள் அறியாதது.

பிரமாண்டத்திற்கு பெயர் பெற்றவர்

பிரமாண்டத்திற்கு பெயர் பெற்றவர்

ராஜமெளலியின் சிறப்பே, அவர் இயக்கும் திரைப்படங்களில் இருக்கும் பிரமாண்டங்கள் தான். சிறிய காட்சியைக் கூட பிரமாண்டத்தால் மெருகேற்றி, ரசிகர்களை பிரமிக்க வைப்பதில் பெரிய வாத்தியார். 'மகதீரா', 'நான் ஈ' படங்கள் அதற்கு சிறிய உதாரணம் என்றால், 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்கள் ரசிகர்கள் அதுவரை காணாத பிரமாண்டத்தை திரையில் காட்டியது. இதனால், ராஜமெளலியின் படங்கள் என்றாலே, ரசிகர்களிடம் ஒரு வைப்ரேஷன் இருக்கும்.

சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி

சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில், ராஜமெளலி இயக்கியிருந்த 'ஆர்.ஆர்.ஆர்'' படம், பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைகிறார் ராஜமெளலி. இரண்டு சூப்பர் ஸ்டார்களும் முதன்முறையாக இணைவதால், இந்தப் படம் குறித்து இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

ஸ்டூடண்ட் நம்பர் 1 ஃப்ளாஸ்பேக்

ஸ்டூடண்ட் நம்பர் 1 ஃப்ளாஸ்பேக்

இந்நிலையில், ராஜமெளலி இயக்குநராக அறிமுகமான 'ஸ்டூடண்ட் நம்பர் 1' படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு இதுதான் முதல் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. அதே டைட்டில் தமிழில் ரீமேக்கான 'ஸ்டூடண்ட் நம்பர் 1' படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு முன்னர் ராஜமெளலி தேர்வு செய்தது பிரபாஸை தான் எனவும், தயாரிப்பாளர்கள் தான் ஜூனியர் என்.டி.ஆரை கமிட் செய்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X