பரியேறும் பெருமாள் படத்தில் மிரட்டிய மாரிமுத்து.. மாரி செல்வராஜ் பற்றி சொன்னதை மறக்க முடியுமா?
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் அறிமுகமான பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோயின் கயல் ஆனந்தியின் அப்பாவாக நடித்திருப்பார் மாரிமுத்து. அதற்கு முன் நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும் மாரிமுத்துவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது பரியேறும் பெருமாள் தான்.
மாரிமுத்து இயக்குனராக இருந்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் ஒரு நடிகராக மட்டுமே செட்டுக்கு சென்றேன் என அந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

பரியேறும் பெருமாள் பட வில்லன்: ஆதிக்க சாதி மனநிலையை கொண்ட ஸ்ரீராம் எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயின் ஜோவின் தந்தையாக நடித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து முடித்து விட்டு அவர் அளித்த பேட்டியில் பெண்களை கொச்சைப்படுத்தும் கதாபாத்திரத்திலும், தேசிய தலைவர்களை அவமானப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளுடன் இருப்பதாக கூறினார்.
சினிமாவில் எப்போதுமே சும்மா வந்து போற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் யதார்த்தமாக கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் மாரிமுத்து பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் பட்ட அவமானம்: பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ அவதிப்பட்டதை போலவே இயக்குநர் மாரி செல்வராஜும் உண்மையிலேயே அவமானப்பட்டுள்ளார் என்றும் அந்த வலியைத்தான் பரியேறும் பெருமாள் படமாக அவர் திரையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்றும் பாராட்டி பேசியிருந்தார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் கதையாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதே எனக்கு என் கதாபாத்திரம் என்ன என்பது புரிந்து விட்டது. ஹீரோவை அடித்து துவைத்து ரயில்வே டிராக்கில் போட்டு விடுவீர்கள். ஆனால், அவன் ஆசையா வளர்த்து இறந்து போன நாய் ஒன்று அருவமாக வந்து அவனை காப்பாற்றும் என அவர் சொல்லும் போதே சிலிர்த்து விட்டேன்.
கிளைமேக்ஸ் புல்லரிச்சுடுச்சு: அவர் கதையாக சொன்னதை அப்படியே காட்சியாக எடுத்து மிரட்டியிருப்பார். கடைசியில் கிளைமேக்ஸ் சொல்லும் போது, அந்த சம்பவத்துக்கு பிறகு நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் நீங்களும் ஹீரோவும் காலேஜ் கேண்டீன்ல சந்திப்பீங்க, உங்க இரண்டு பேருக்கும் இடையே டிஸ்கஸன் நடக்கும். ஆனால், அதில் என்ன பேசிக் கொள்வோம் என அவர் அப்போது சொல்லவில்லை. அதுதான் ஹைலைட். இருவரும் பேசிட்டு அப்படியே போயிடுவீங்க சார்.. அவ்ளோ தான் என்றதுமே புதுசா இருக்கே கிளைமேக்ஸ் என நடிக்க ஒப்புக் கொண்டேன்.
படத்தையும் அவர் கதையாக சொன்னதை விட கலக்கலாக எடுத்து மிரட்டியிருந்தார் மாரி செல்வராஜ் என நடிகர் மாரிமுத்து பேசிய பேட்டியை எல்லாம் மாரி செல்வராஜ் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











