'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

By Mayura Akilan

ஏதோ ஒரு வேகத்தில் பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன் நடித்த காட்சிகளை வெட்டி எறிந்த ஷங்கர், இப்போது அவசரம் அவசரமாக எடிட்டிங் டேபிளில் ஒட்டிக்கொண்டிருக்கிறாராம்.

பவர் ஸ்டாரின் காட்சிகளை ஷங்கர் வெட்டியதற்கும் அவற்றை மீண்டும் சேர்ப்பதற்கும் ஒரு காரணம் உண்டு என்கின்றனர் கோடம்பாக்க வாசிகள்.

பவர்ஸ்டாரின் லட்டு பவர்தான் இதற்கு பெரும் காரணமாக கூறப்படுகிறது. லட்டு பட ரிலீசுக்கு முன்பே 'ஐ' படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார் பவர். அப்புறம் ஷங்கர் தன்னோட ரசிகர் என்று விழா மேடையில் பகிரங்கமாக அறிவிக்கவே கடுப்பாகிப் போன ஷங்கர் அதே வேகத்தோடு போய் நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். இப்போது வேக வேகமாக வெட்டிய காட்சிகளை சேர்த்து வருகிறாராம்.

சந்தானம் ரெகமன்ட்

சந்தானம் ரெகமன்ட்

‘லத்திகா' புகழுக்குப் பின் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார் பவர். அப்போது இருவருக்கும் இடையே பாசப் பிணைப்பு அதிகமாகிப் போனது. அதே நட்பு, பாசத்தோடு ‘ஐ'படத்தில் பவருக்கு ரெகமன்ட் செய்தார் சந்தானம்.

ஆடியோ ரிலீஸ் பவர்ஃபுல்

ஆடியோ ரிலீஸ் பவர்ஃபுல்

‘ஐ' படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் காம்பினேஷனில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ‘கண்ணா லட்டு' ஆடியோ வெளியீடு, தேவி திரையரங்கில் நடைபெற்றது. டைரக்டர் ஷங்கர் விழாவில் கலந்து கொண்டார்.

அருமைத் தம்பி ஷங்கர்

அருமைத் தம்பி ஷங்கர்

விழாவில் பேசிய பவர் ஸ்டார், "அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது கனவா? நனவா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உண்மையிலேயே நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றார்.

அவர் என்னோட ரசிகர்

அவர் என்னோட ரசிகர்

அதோடு விடவில்லை பவர், ஒரு முறையாவது நான் அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் அருமை தம்பி ஷங்கர் அவர்கள், "அண்ணே... நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்" என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன்" என்று விளாசிவிட்டார்.

கடுப்பான ஷங்கர்

கடுப்பான ஷங்கர்

இந்தப் பேச்சினால் கடுப்படைந்த ஷங்கர், விழா முடிந்த கையோடு எடிட்டிங் டேபிளுக்கு போய், பவரின் காட்சிகளில் கை வைத்து விட்டார் என்கிறார்கள்.

லட்டுவினால் உயர்ந்த வேல்யூ

லட்டுவினால் உயர்ந்த வேல்யூ

ஆனால் லட்டு படம் ரிலீஸ் ஆகி பவர் ஸ்டார், ஓவர் நைட்டில் பவர், எவர் எட்டாத உயரத்துக்கு போய்விட்டார். இன்றைய தேதியில், கோடம்பாக்கத்தில் பவரின் மார்க்கெட் வேல்யூ ஓஹோ!

ஒட்டப்படும் காட்சிகள்

ஒட்டப்படும் காட்சிகள்

இந்த திடீர் திருப்பத்தை அடுத்து, ஷங்கர் மீண்டும் ஒரு தடவை எடிட்டிங் டேபிளுக்கு விசிட் அடித்துள்ளார் என்கிறார்கள். வெட்டப்பட்ட ‘பவர் ஃபுல்' காட்சிகள், மீண்டும் இணைக்கப்படுகின்றனவாம்!

ஸ் ஸ்ஸ் அப்பா.... இப்பவே 'ஐ'யைக் கட்டுதே, ரெண்டு 'லட்டு' கொண்டு வாங்கப்பா தின்னுட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X