கமலுடன் மோதும் யுவன்: ஏன், ஏன் இந்த விபரீத முடிவு?
சென்னை: யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள பியார் பிரேமா காதல் படம் விஸ்வரூபம் 2 படத்துடன் மோதக்கூடும் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்ததுடன் தயாரித்தும் உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. இசை வெளியீட்டு விழாவுக்கு சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே ஆகஸ்ட் 10ம் தேதி தான் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











