அஜித்துடன் பிரச்னை.. அந்த அறையில் பாலாவுக்கும், ஏகேவுக்கும் நடந்தது இதுதான்.. நேரில் பார்த்தவர் ஓபன் டாக்

சென்னை: அஜித்குமார் இப்போது கார் ரேஸில் அதிக கவனத்தை செலுத்திவருகிறார். கடந்த வருடம் குட் பேட் அக்லி, விடாமுயற்சி என இரண்டு படங்களில் நடித்த அவர்; இந்த வருடத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாலாவுக்கும், அஜித்துக்கும் நடந்த பிரச்னையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து தயாரிப்பாளர் எல்.சுரேஷ் பேசியுள்ளார்.

அஜித்குமார் நடிப்பில் கடந்த வருடத்தில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வந்தன. வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கும் அஜித்; 2025ஆம் ஆண்டு இரண்டு படங்களில் நடித்தது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் கார் ரேஸ்தான். கார் ரேஸில் இருக்கும்போது தனக்கு வேறு எந்த கமிட்மென்ட்டும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து அப்படி நடித்தார். ஆனால் அவற்றில் குட் பேட் அக்லி மட்டுமே ஏகே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. விடாமுயற்சி படுதோல்வியை சந்தித்தது.

கார் ரேஸில் சூப்பர்: சினிமாவில் எப்படி தனக்கென தனி தடத்தை பதித்தாரோ; அதேபோல் தனது விருப்பத்துக்குரிய கார் ரேஸிலும் தன்னுடைய தாக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் ஏகே. பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயத்தில் தனது டீமுடன் களமிறங்கி வெற்றிகளை பெற்றுவருகிறார். உலகத்தின் எந்த நாட்டில் கார் பந்தயத்தில் அவர் கலந்துகொண்டாலும் அங்கே ரசிகர்களும் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் நேரில் வந்து ஏகேவையும், ரேஸையும் பார்த்து செல்கிறார்கள்.

What Really Happened Between Ajith Kumar and Bala Producer Breaks Silence
Photo Credit:

ஏகேவுக்குள் வந்த மாற்றம்: கார் ரேஸ் அஜித்துக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பேட்டிகள் அதிகம் கொடுக்காமல் இருக்கும் அவர்; சமீபமாக பேட்டிகளும் கொடுத்துவருகிறார். அதேபோல் விளம்பர படங்களில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை வைத்திருந்த ஏகே; கேம்பா கோலா குளிர்பானத்தையும் ப்ரோமோட் செய்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியிலேயே அதிருப்தியையும், விமர்சனத்தையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

பாலாவுடன் நடந்த பிரச்னை: இதற்கிடையே பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில் முதலில் அஜித்தான் நடிப்பதாக இருந்தார். அதற்காக நீண்ட முடியையும் வளர்த்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து அவர் வெளியேற ஆர்யா நடித்தது எல்லோரும் அறிந்ததே. இது ஒருபக்கம் இருகக் நான் கடவுள் பட சமயத்தில் அஜித்துக்கும், பாலாவுக்கும் பிரச்னை வந்ததாகவும்; அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஜித்தை பாலா அடித்துவிட்டார் என்றும் நீண்ட வருடங்களாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

தயாரிப்பாளர் விளக்கம்: இந்நிலையில் வாக்குவாதம் நடந்த இடத்தில் இருந்த தயாரிப்பாளர் எல்.சுரேஷ் இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் கடவுள் படத்தின்போது அஜித்துக்கும் பாலாவுக்கும் மனஸ்தாபம் வந்தது உண்மைதான். ஒரு ரூமில் வைத்து இரண்டு பேரும் பேசினார்கள். விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்கிற முறையில் நானும் அங்கே இருந்தேன். அப்போது இன்னும் சில மாதங்கள் காத்திருக்குமாறு பாலா கூறினார். அப்போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்தது. அதனால் படத்திலிருந்து அஜித் வெளியேறிவிட்டார். இவ்வளவுதான் நடந்தது. அஜித்தை பாலா அடித்துவிட்டார் என்று சொல்வதெல்லாம் பொய்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X