twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்.ஏ.சி. சொன்னது அப்படியே நடந்துடுச்சே... பிகில் போஸ்டரில் இதை கவனிச்சீங்களா!

    இனி எல்லோரும் காவி வேட்டி தான் கட்டிக்கனும் என எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னது, பிகில் போஸ்டரின் மூலம் உண்மை தான் என தெரியவந்துள்ளது.

    |

    Recommended Video

    Bigil Movie Poster: தளபதி 63 படத்தின் பிரஸ்ட் லுக்- வீடியோ

    சென்னை: சில தினங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன விஷயம் உண்மை தான் என்பது பிகில் போஸ்டரை பார்க்கும் போது தெரியவந்துள்ளது.

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டர்களுக்கு விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    விஜயின் இரண்டு கெட்டப்புகளை போஸ்டரில் போட்டு, ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டார் அட்லி. விஜய்யின் பிறந்தநாள் என்பதால், பிகில் போஸ்டர் டிவிட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னில் உள்ளது.

    Bigil Second Look Poster: வெளியானது பிகில் 2வது போஸ்டர்.. பர்ஸ்ட்லுக்கவிட செமையா இருக்கே! Bigil Second Look Poster: வெளியானது பிகில் 2வது போஸ்டர்.. பர்ஸ்ட்லுக்கவிட செமையா இருக்கே!

    இனி காவி வேட்டி தான்

    இனி காவி வேட்டி தான்

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன ஒரு கருத்தை தான் பிகில் படத்தில் சிம்பாலிக்காக செய்துள்ளனரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், இனி எல்லோரும் காவி வேட்டி கட்டிக்க வேண்டியது தான் என கூறியிருந்தார்.

    காவி வேட்டி பார்சல்

    காவி வேட்டி பார்சல்

    இதையடுத்து பாஜகவை சேர்ந்த சிலர், எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிற்கு காவி வேட்டிகளை பார்சல் அனுப்பினர். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போதும் காவி வேட்டி பார்சல் வந்துகொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

    பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில் நேற்று வெளியான பிகில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அப்பா கெட்டப்பில் இருக்கும் விஜய் காவி வேட்டி கட்டியிருக்கிறார். இதனால், அந்த வேட்டி தானோ இது என ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். அதுபோல், எஸ்.ஏ.சி. அன்று சொன்னது விஜய் விஷயத்தில் உண்மையாகிவிட்டதே என இண்டர்நெட்டில் கமெண்ட் பாசாகிறது.

    டகால்டி ரீமேக்

    டகால்டி ரீமேக்

    ராஜா ராணி தொடங்கி அட்லி படங்கள் எல்லாமே ஏற்கனவே வெளியான சூப்பர் ஹிட்டான படங்களின் டகால்டி ரீமேக் தான் என்பது ஊர் அறிந்த விஷயம். அந்த வகையில் பிகில், தேவர்மகன் படத்தின் சாயலில் இருக்கிறது என இப்போதே பேச்சு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், காவி வேட்டி பற்றியும் நெட்டிசன்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டால், அடுத்த என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர்.

    English summary
    In Bigil first look poster actor Vijay seen wearing a saffron dhothi, which is resembling his father S.A.Chandrasekar's statement regarding Parliment election result.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X