ரஜினிகாந்தும், அஜீத் குமாரும்...
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், 'தல' அஜீத் குமாருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன.
தமிழக மக்களின் மனம் கவர்ந்த ரஜினிகாந்துக்கும், அஜீத் குமாருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

தலைக்கனமே இல்லை
சூப்பர் ஸ்டாராக இருந்தும் தலைக்கனமே இல்லாமல் இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது அஜீத் குமாரும் ரஜினி வழியை பின்பற்றுகிறார்.

எளிமை விரும்பிகள்
என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் ரஜினியும், அஜீத்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் பாரபட்சமின்றி பழகுவார்கள். அதனால் தான் அனைவரும் அவர்களைக் கொண்டாடுகிறார்கள்.

பக்திப் பாதையில்...
ரஜினிகாந்துக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று அஜீத் குமாரும் ஆன்மீக பாதையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். அவர் தற்போது புத்த மத கொள்கைகள் அடங்கிய நூலைப் படித்து வருகிறார்.

மேக்கப் இன்றி விழாக்களுக்கு வருதல்
நடிகர்கள் வயதாகிவிட்டால் தலைக்கு டை அடித்துக் கொண்டும், மேக்கப்போட்டுக் கொண்டும் வருகிறார்கள். ஆனால் ரஜினிகாந்தோ தான் இயல்பில் எப்படி இருக்கிறோமோ அதே போன்று தான் வருவார். தற்போது தலையெல்லாம் நரைத்த அஜீத்தும் டை எதுவும் அடிக்காமல் இயல்பாகவே வருகிறார்.


Click it and Unblock the Notifications











