முருகதாஸ், சிம்புவை அடுத்து 'விஜய்'யை இயக்கப் போவது யார்?
சென்னை: சிம்புதேவனை அடுத்து விஜய்யை இயக்கப் போவது யார் என்று தெரியுமா?
ஜில்லா வெற்றியை அடுத்து விஜய் மிகவும் பிசியாகிவிட்டார். முதலில் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து சிம்புதேவன் ஆகியோரின் படங்களில் நடிக்கிறார். ஒரு நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்யப் போகிறார்.
இந்நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

3ம் தேதி ஏ.ஆர்.எம்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தின் படப்பிடிப்பு வரும் 3ம் தேதி துவங்குகிறது. படம் ஆக்ஸட் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

ஜூலை
வரும் ஜுலை மாதம் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. விஜய் சிம்புதேவன் கூறிய ஒரு வரிக் கதையிலேயே அசந்துவிட்டாராம்.

அட்லீ
ராஜா ராணி புகழ் இயக்குனர் அட்லீயின் படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சுசீ, சசி
இந்நிலையில் பாண்டியநாடு இயக்குனர் சுசீந்திரனிடம் விஜய் தனக்கு ஒரு கதையை தயார் செய்யுமாறு தெரிவித்துள்ளார். மேலும் சசிகுமார் இயக்கத்தில் அடுத்த ஆண்டு ஒரு படத்தில் விஜய் நடிப்பார் என்று வேறு கூறப்படுகிறது.

அடுத்து
சிம்புதேவன் படத்தை முடித்த பிறகு விஜய் அட்லீ அல்லது சுசீந்திரன் படத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











